நம்ம ஊர்களிலும் இது போல் ஒரு சில காபி கடைகளிலும் ஹோட்டல்களிலும் செய்யலாமே..? உணவு பொருள்களை இலவசமாக தரலாமே..?
ஒரு முறை நான் இத்தாலி போன போது நடந்த காட்சி.
இரண்டு நண்பர்கள் காபி ஷாப்க்கு வந்தனர் .அதில் ஒருவர் மூன்று காபி ஆர்டர் கொடுத்தார் .இரண்டு மட்டும் தாருங்கள் ஒரு காபிக்கு பணம் எடுத்து கொள்ளுங்கள் என்றார்.அவர் நண்பர் கேட்டார் நாம் இரண்டு பேர் தான் இருக்கோம் எதுக்கு மூன்று காபி ஆர்டர் கொடுத்தாய் என்று கேட்டார்.பொறுத்திருந்து பார் என்றார் அவர் நண்பர்.
அடுத்து இரண்டு பெண்கள் வந்தனர் இரண்டு காபி ஆர்டர் கொடுத்தார்கள் அதை குடித்து விட்டு சென்று விட்டனர்.
அடுத்து மூன்று மருத்துவர்கள் ஏழு காபி ஆர்டர் கொடுத்து விட்டு மூன்று காபி குடித்துவிட்டு நான்கு காபிக்கு பணம் கட்டி விட்டு சென்றனர்.
அடுத்தாக ஒரு வயதான பிச்சைக்காரர் வந்தார் ,இலவச காபி இருந்தால் கொடுங்கள் என்று கேட்டார்.அவர்களும் அந்த பிச்சைகாரனுக்கு பணம் வாங்காமல் குடுத்தனர்.இப்போது புரிகிறதா நான் ஏன் ஒரு எக்ஸ்ட்ரா காபிக்கு பணம் கொடுத்தேன் என்று.
இல்லாதவங்களுக்கு இந்த குளிர் காலத்தில் நாம் தான் குடுக்கனும் அதில் தான் பெரிய மகிழ்ச்சியே இருக்கிறது.
நம்ம ஊர்களிலும் இது போல் ஒரு சில காபி கடைகளிலும் ஹோட்டல்களிலும் செய்யலாமே..? உணவு பொருள்களை இலவசமாக தரலாமே..?
மாற்றங்கள் நம்மிடம் இருந்து வரமுயற்சி செய்வோம்...!
No comments:
Post a Comment