ஒரு பெண் எப்போது அழகா தெரிகிறாள் தெரியுமா..
அவள் கண்ணருகே இருக்கும் மை கரையும் வரை சிரித்து அழும் போதும்,
அவளே குழந்தை அவளுக்கு குழந்தை உண்டாதனை அறியும் போதும்,
நகம் கடிக்கும் போதும்,
நாணம் கொள்ளும் போதும்,
நகைக்கும் போதும்,
குறுகுறு பார்வை பார்க்கும் போதும் ,
அவளை பார்க்கும் போது அவள் விலகி திரும்பும் போதும்,
கால் விரலால் கோலம் போட்டு தலையை ஆட்டும் போதும்,
நமக்காய் விட்டு கொடுக்கும் போதும்,
விட்டுகொடுத்தை வேண்டாம் என்று சொல்லும் போதும்,
படிக்கட்டில் தொங்கும்போது அவள் பார்வை என் மேல் மட்டும் விழும் போதும்,
அவள் மனதில் இருந்தும் அவள் அதை மறைக்கும் போதும்..
அழகாய் தெரிகிறாள்....
இன்னும் பல....
நீண்ட கூந்தல், கறுத்த தலைமுடி, முட்டை கண்கள், அழகிய பற்கள், சாயமற்ற உதடுகள், சாய தோன்றும் தோள்கள், இறுதிவரை கைகோர்த்து வரும் விரல்கள், பேசாத மௌனங்கள், சிரித்தும் சிரிக்காத புன்னகைகள், மானம் காக்கும் உடைகள், நெற்றி புருவங்கள், சிறு பொட்டு, அவளுடன் போட்டிடும் மலர்கள்...
இன்னும் பல....
- முனைவர் நந்தகோபால் இராசா..
No comments:
Post a Comment