Tuesday, April 9, 2013

அசிங்கங்களின் 'முதல் அத்தியாயம்'






அசிங்கங்களின் 'முதல் அத்தியாயம்' என்கிற தலைப்பிட்ட கீழை இளையவனின் இந்த கவிதையை நீங்கள் படிக்கும் முன்... முன்னுரையாக 'இன்று ஒரு தகவல்' குழு சார்பாக, சில வரிகள்....

நம் இந்திய தேசத்தில் தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும், வக்கிர பலாத்காரங்களும் மிக அதிகமாகி கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. அதற்கு பல காரணங்கள் சொன்னாலும் கூட, 'மூல காரணம்' என்ன என்பதை இந்த கவிதை நமக்கு மிக தெளிவாக உணர்த்துகிறது. அரை குறை ஆடை அணியும் பெண்கள், நமது வீடுகளில் இருந்தால், உடன் தாமதிக்காமல் தந்தை, அண்ணன், தம்பி, மாமன், மச்சான் என்ற முறையில் நாம் அதை தடுக்க முயற்சிக்க வேண்டும்.

அதனை விடுத்து நமது வீட்டு பெண்களை அரை குறை ஆடை அணிந்து வெளி உலகுக்கு கூட்டி செல்வது, ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் செயலுக்கு ஒப்பாகும். சட்டங்களால் திருத்த முடியாததை, உங்கள் உள்ளங்களை சுய பரிசோதனை செய்வதன் முலமாக, நல்ல காரியங்களுக்காக ஒரு துரும்பையாவது எடுத்து போடுங்கள். இப்போது கவிதையை புரிதலுடன் படிக்க துவங்குங்கள் நண்பர்களே....

அசிங்கங்களின் 'முதல் அத்தியாயம்'...

எனதருமை ஆண் வர்க்கமே
எத்தருணமும் நீங்கள்
தலை குனிய தயாராயிருங்கள்..??
இச்சைகளை தூண்டி,
கொச்சைகளை அழைப்பிடும்
'அசிங்க' மங்கைகளின் அணிவகுப்பு
நகர் வலம் வரும் போதெல்லாம்....
இது
ஆண்களின் தலை குனிவல்ல...
அகிலத்தின் தலை குனிவு..!

'மார்டன்' உலகில்
மார்பை மறைக்கும்
மாராப்புகள் மறைந்தே போனது...
தலையை மூடும் துப்பட்டாக்கள்
கைக் குட்டையாய் குறைந்தே போனது....
மேலை கலாச்சாரத்தை
நகலெடுக்கும் 'நாகரிக மங்கைகள்'...
சீரழிந்த சமுதாயத்தில்
'சாத்தானின் தங்கைகள்'....

உருப்படாத உடுப்புகளை சுமந்து
சந்தியில் தெரியும் சல்லாபங்கள்...
சந்ததியின் சாபக் கேடு..!
காம போதையேற்றும்
கிளுகிலுப்பு ஆடைகள்...
கற்பழிப்புக் கொலைகளை
கடந்து வரும் காம ஓடைகள்....
'உடை' எனும்
பயன்பாட்டை தவறாக
அகராதி கொண்ட 'தங்க மங்கைகள்'
வீதிகளில் வெட்கத்தை
'உடை'த்து ஆண் மகனின் வேதனையில்
சாதனை புரிவது தான் அழகியலா..?

ஆடை சிக்கனத்தால்
அழிந்து போன
'அச்சம், மடம், நாணங்கள்'
கற்பிக்கப்படுகிறது.!?
ஆரம்பக் கல்வியாக....
வகுப்பறை பாடங்களில்..!
இது தான் ஆடை சுதந்திரமா..?
வன்புணர் களையை ஆடையில்
வித்திட்ட வன்முறையே...
வல்லுறவு விதையை அலங்காரமாய்
விதைத்திட்ட தலை முறையே....

காம இச்சைக்கு தூபம் போடும்
காட்சிப் பொருளாய் காணக் கிடைக்கும்
அங்கங்களின் அவயங்கள்...
அசிங்கங்களின் அவலங்கள்....
தெருவெங்கும்
காமக் காட்சிகள் காட்டும்
ஆபாச சுவரொட்டிகளை எல்லாம்
சாயம் பூசி மறைக்கும்
'பெண்ணுரிமை பாசறைகள்'
இங்கு சாயம் போகிறது...?
அரை குறை ஆடைகளை
தூக்கிப் பிடித்தவாறு...!
பெண்ணே...

'ஆடையில் கவனம் தேவை'
அடக்குமுறை சொல்லாய் போனது...
'ஆபாசமாய் ஆடையுடுத்தி உலவு'
விடுதலை வார்த்தையாய் போனது....
பெண்ணே...
நீ
ஆபாசத்தை
அரை குறை ஆடைகளில்
கட்டம் போட்டு காட்டி விட்டு
சட்டம் மட்டும் பேசும்
சம்பிரதாயத்தை எங்கு கற்றாய்..?

மறைப்பதை விடுத்து
திறப்பதை சுதந்திரமாக்கிய
தீமைகளின் வேர்கள்
தொட்டுத் தொடர்கிறது....
நரகத்தின் வாசல் வரை..!
'ஃபேஷன்' என்ற பெயரில்
கிழிக்கப்படும் ஜீன்ஸுகளும்
குறைக்கப்படும் பாவாடைகளும்
உள்ளாடை தெரியும் உடுப்புகளும்
சன்னல் வைத்த சாக்கெட்டும்
பின்னல் குறைந்த மாராப்பும்
தலை விலகிய தாவணியும்
தலை விதியை நிர்ணயிக்கும்..?
வாடகைத் 'தாயின் வாரிசுகள்'....!

நாகரிக மங்கைகளின்
'சிக்'கென்ற உடைகளில்
சிக்கிப் புடைக்கும் சதைத் துண்டுகள்..
சீக்கிரமாய் விதைக்கத் தானே செய்கிறது...
சல்லாபங்களை..!
ஆடைகளால்
மூடப்பட வேண்டிய
தொப்புள் குழிகள்
நிரப்பப்படுகிறது....
காமக் குமிழிகளால்..!

கார்ப்பரேட் விபச்சாரத்தை
கட்டவிழ்த்து விட்ட
சீரழிந்த ஆடைகளின் 'சினேகிதிகள்'
அனுதினமும் பற்ற வைக்கும்
காம வெறியின் நெருப்பு ஜுவாலைகள்
பேரிளம் பெண்களை பொசுக்காத போது.....
பல நேரம்...
பள்ளிச் சிறுமிகளையும்..,,,
சில நேரம்....
பாடைக் கிழவிகளையும்..,,,
கட்டுக்கடங்கா காமம் சுட்டெரிக்கிறது..!!
பெண்களின்
அசிங்க ஆடைகளின் சுதந்திரத்தால்
ஆண்களின்
பார்வை சுதந்திரம் பறி போனது....

இங்கு
கலாச்சார ஆடைகள்
கலையப்பட்டதால்
கதறக் கதறக் கற்பழிக்கப்பட்டது..??
கலியுக நவ நாகரீகம்..!
ஒழுக்க நெறி
கற்பு நெறி
பெண் சுதந்திரம் பேசும்
பத்திரிகைகளின் பக்கங்கள் தோறும்
பளிச்சிடுகிறது...

பெண்களின் மார்பும், இடுப்பும்
தொடையும், தொப்புளும்....
ஊடகங்களின்
கவர்ச்சி திணிப்புகளால்
கருவூட்டப்பட்ட காமுகக் கூட்டம்
பசியாறும் 'பாலியல் பண்டமாய்'
பெண்ணினம் பரிமாறப்படுகிறது....

பெண்ணே நீ
சேலைகளில் காட்டும்
'இறக்கத்தால்' கிறங்கும்
காம மனங்களில்
'இரக்கத்தை' நோக்குவது
சாத்தியமா..?
இயன்றால்
சேலைகள் கட்டுவதில்
கண்ணியம் படி...
தூரப் போட்ட
துப்பட்டாக்களைத்
தேடிப் பிடி...

ஒழுக்கம் பேணி
உடுத்தாத உடுப்பு...
உடலீர்ப்பின் காமங்கள்
கொப்பளிக்கும்
உலகின் அருவெறுப்பு....
பெண்ணே...
உன்
உள்ளத்தின் கண்ணியம்
உடைகளில் தெரியட்டும்..!
கால் நூற்றாண்டுகளாய்
காணாமல் போன
கண்ணிய ஆடைகளின் 'கலை மகள்'
இனி எப்போது காணக் கிடைப்பாள்..??
காத்திருப்பு தொடர்கிறது....

முடிவுரை :

படித்த நல்ல விசயங்களை எடுத்து செல்லுங்கள்... பட்டி தொட்டிக்கெல்லாம் முகப் புத்தகத்தில் பகிர்வதன் மூலமாக... முகம் தெரியா எண்ணற்ற நண்பர்கள், பல உபயோகமான தகவல்களை அனுப்பி கொண்டு இருக்கிறார்கள் அதில் என்னை மிகவும் கவர்ந்த கட்டுரைகளும் இடம் பெற்று உள்ளன. குறிப்பாக நான் ரசித்து படித்த கவிதைகளில் கீழை இளையவனின் கவிதைகளும் அடங்கும். இது போன்ற சமுதாய சிந்தனை கொண்ட கவிதைகளை எழுதுபவர்கள் குறைந்து விட்டார்கள் என்பது தான் வருத்தத்துக்குரிய விடையம்.

இன்னும் 'கீழை இளையவன்' மற்றும் பிற நண்பர்களும் இது போன்ற பல ஆக்கங்களை தொடர்ந்து படைக்க வேண்டும். 'எழுத்து' என்பது பல நாட்டின் தலை எழுத்தை மாற்றிய வரலாறுகள் இருக்கிறது. தொடர்ந்து எழுதுவோம் தோழர்களே... சமுதாய எழுச்சி நோக்கி...
நண்பர் கீழை இளையவனுக்கு இன்று ஒரு தகவல் குழு சார்பாக நமது மனமார்ந்த பாரட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.
 

No comments:

Post a Comment