Friday, March 29, 2013

வெயிலின் ராஜ்ஜியம் தொடங்கியாச்சு...

கொளுத்தும் வெயிலில் கலர், கலரான குளிர்பானங்கள் வேண்டாமே...!

வெயிலின் ராஜ்ஜியம் தொடங்கியாச்சு... உச்சி முதல் உள்ளங்கால் வரை வியர்வையும், உடலுக்குள் வறட்சியும் என நம்மை வாட்டி வதைத்து விடும். இதில் முக்கியமாக தொண்டை வறட்சி... குளிராக எது கிடைத்தாலும் குடித்துவிடுவோம். கோடைகாலத்தில் கலர், கலரான குளிர்பானங்களை எல்லாக் கடைகளிலும் வைத்து விற்கிறார்கள். தாகம் அடங்க வேண்டும் என்பதற்காக, அவற்றை அதிக விலை கொடுத்து வாங்கி உபயோகிக்கிறோம்.

இந்த கலரான குளிர்பானங்களால் உடலில் தேவையற்ற கலோரிதான் சேருமே தவிர, வேறு எந்தவித பலன்களும் கிடையாது என்கிறார்கள் டாக்டர்கள். இப்போதெல்லாம் ஐஸ் காபி, ஐஸ் டீ ஆகியவையும் அமோகமாக விற்பனையாகின்றன. இவற்றை தவிர்ப்பதும் நல்லது.

எண்ணெயில் பொரித்து எடுக்கும் சைவ மற்றும் அசைவ உணவு வகைகளை இந்த கோடையில் முடிந்தவரை தவிர்ப்பதுதான் நல்லது.

வெளியில் சென்றால் கையோடு ஒரு பாட்டிலில் சுத்தமான குடிநீரை எடுத்து செல்லுங்கள். இல்லையென்றால், இயற்கை பானமான இளநீரை வாங்கி குடியுங்கள்.

மோர், எலுமிச்சை பழச்சாறு ஆகியவையும் நல்லதுதான். அதேநேரம், அவற்றில் சேர்க்கப்படும் தண்ணீர் சுத்தமானதாக இருக்க வேண்டும். முடிந்தவரை, அவற்றை நீங்களே வீட்டில் தயார் செய்து உட்கொள்வதுதான் சிறந்தது...!
Like here first -->> @[433124750055265:274:இன்று ஒரு தகவல். Today A Message.]

Thursday, March 28, 2013

மோரே - ஒரு குட்டித் தமிழ்நாடு!

மோரே - ஒரு குட்டித் தமிழ்நாடு!

”செம்மொழியான தமிழ் மொழியாம்...தமிழ் மொழியாம்... இன்பத் தமிழ் மொழியாம்...!”-தமிழின் புதிய கீதம் ஒலித்த இடம் தமிழகம் அல்ல; மோரே! 

மணிப்பூர் மாநிலம் சாண்டல் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியாவின் கிழக்கு எல்லைக் கிராமம்தான் மோரே. இது ஒரு மலைக்கிராமம். பூர்வீகக் குடிகளான குக்கீஸ்களுடன் தமிழர்கள், நேபாளிகள், பஞ்சாபிகள் என வசித்து வருகின்றனர்.இங்கு தமிழர்கள் அதிகம் வசித்து வருவதால் சரளமாகத் தமிழ் புழக்கத்தில் உள்ளது. மோரேவின் பூர்வீகக் குடிகளும் எல்லைப்பகுதியைச் சேர்ந்த பர்மியர்களுமே தமிழில் பேசிக் கொள்வது ஆச்சரியம்.

தமிழர்கள் வந்த கதை

இங்கு தமிழர்கள் வந்த கதை சோகம் கலந்த சுவாரஸ்யம். அதற்குள் இந்திய சுதந்திரப்போரின் சுவடுகளும் பதிந்திருக்கின்றன. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசியப்படையில் மோரே தமிழர்களும் இணைந்திருந்ததை இங்குள்ள பாட்டிகள் கதைக்கதையாகக் கூறி வருகிறார்கள். மோரேவையும், சூரஜ்சந்த்பூரையும் இந்திய தேசியப்படை வீரர்கள் பயன்படுத்தி பிரிட்டிஷ் படையை எதிர்த்து நாகலாந்து வரை வந்து ஐ.என்.ஏ. கொடியை நாட்டியிருக்கிறார்கள்.

பிரிட்டிஷ் ஆட்சியின் போது பர்மாவும் இந்தியாவின் அங்கமாகத்தான் இருந்தது. பர்மாவின் தலைநகர் ரங்கூன் வரை வியாபாரத்துக்காக இந்தியர்கள் சென்றுவர மோரே ஒரு முக்கியக் நுழைவாயிலாகச் செயல்பட்டது.இவ்வாறு வியாபாரத்துக்குச் சென்றுவரும் இந்தியர்களுக்காக மோரே தமிழர்கள் வாடகை வீடுகள் மற்றும் உணவகங்கள் நடத்தி தங்கள் வருவாயை ஈட்டிக் கொண்டார்கள். காலப்போக்கில் மோரே கிராமமாக உருவெடுத்தது. 1960களில் இங்குள்ள குக்கி பழங்குடியின மக்களின் கட்டுப்பாட்டுக்குள்தான் மோரே இருந்து வந்ததாக்கவும், ஷொலிம் பெயிட் என்பவர் கிராமத் தலைவராக இருந்ததாகவும் கூறுகிறார்கள் இப்பகுதி மக்கள்.

1962 களில் மியான்மரில் ராணுவப் புரட்சி ஏற்பட்டு இந்தியர்கள் அகதிகளாக அனுப்பப்பட்டனர். இதில் பர்மாவில் வசித்த தமிழர்கள் பெரும்பாலானோர் மோரேவில் தஞ்சம் அடைந்தனர். சென்னைக்கு கப்பல்களில் அனுப்பப்பட்ட இந்தியத் தமிழர்களிலும் பெரும்பாலோர் தங்களின் பழக்க வழக்கம் மற்றும் வாழ்க்கை முறைக்கு அனுகூலமான மோரேவை நாடி குடும்பம் குடும்பமாகச் செல்லத் தொடங்கினர். இப்படி வந்தவர்களுக்கு ஷொலிம் பெயிட் உதவிகரமாக இருந்தார்.காரணம் இங்குள்ள தமிழர்கள் செலுத்திய மண் வரிதான். இந்த வரியில் குறிப்பிட்ட பங்கை அவர் எடுத்துக் கொண்டு மீதியை அரசுக்கு செலுத்தியது தனிக்கதை.

தமிழர்கள் இங்கு குடியேறிய காலகட்டத்தில், அருகில் உள்ள, நாம்ப்லாங் சந்தையில் சிறிய அளவில் பண்டமாற்று வியாபாரம் நடந்து வந்தது.அங்கு தொழிலாளர்களாகப் பணிபுரியத் தொடங்கிய தமிழர்களுக்கு அவர்களது புத்திசாலித்தனமும், உழைப்பும் புதிய கதவுகளைத் திறந்தன. 

கூப்பிடு தொலைவில் உள்ள மியான்மரில், ஆடைகள் முதல் மளிகைப் பொருட்கள் வரை இந்திய உற்பத்திகளுக்கு ஏக கிராக்கி இருந்தது. எனவே தமிழர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கினார்கள். துணிவகைகள், பாத்திர பண்டங்கள், மளிகைப் பொருட்கள் எனத் தொடங்கி மின்சாதனங்கள் உள்பட பல்வேறு பொருட்களும் வணிகம் செய்யப்படுகிறது. 

மோரே ஸ்மால் டவுண் கமிட்டி

சமீபத்தில் மோரே -மியான்மர் எல்லையில் தடையற்ற வர்த்தக மையம் அமைக்கப்பட்டது. காலை 7மணிமுதல் மாலை 5மணி வரை இங்கு இருநாட்டினரும் வணிகம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மியான்மரின் டம்மு பகுதிக்குள்ளும் வணிகத்துக்காக சென்று வர அனுமதி தரப்பட்டுள்ளது. 1980 ல் 'மோரே ஸ்மால் டவுண் கமிட்டி’ அமைக்கப்பட்டது. 

மோரே நகரத்தின் அளவு 7.38 சதுர கிலோமீட்டர் அளவுதான்.மோரேவின் மக்கள்தொகை சுமார் 30ஆயிரம். இதில் 17ஆயிரம் பேர் வரை தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.நானூறு குடும்பங்கள் அடங்கிய பகுதி ஒரு வார்டாக கூறப்படுகிறது. தற்போது மோரே ஒன்பது வார்டுகளைக் கொண்டுள்ளது.2,3,4,5,6,7 வார்டுகளில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். 

பெண்வீட்டாருக்கு கண்டிப்பாக திருமண சீர் 

திருமண விஷயத்தில் பெண் வீட்டார்களுக்கு வரதட்சணை உள்பட எந்தப்பிரச்னையும் கிடையாது.பெண்ணுக்கும் ஆணுக்கும் ஒருவரை ஒருவர் பிடித்தால் மட்டுமே திருமணம். பெற்றோர்கள் கட்டாயம் செய்வது கிடையாது. அதேபோல் காதலர்கள் வீட்டை விட்டு ஓடிவிட்டாலும் இரு தரப்பும் பேச்சு வார்த்தை நடத்தி சுமுகமான திருமணம் நடைபெறும். மேலும் மாப்பிள்ளை வீட்டார் பெண்வீட்டாருக்கு கண்டிப்பாக திருமண சீர் கொடுக்கவேண்டும்.திருமணம் முடிந்த அன்றே மணப்பெண் மாப்பிள்ளை வீட்டுக்கு சென்றுவிடுவார். 

மணிப்பூர் மாநிலத்தில் வாழும் உள்ளூர் பெண்கள் வெளிமாநிலத்திலிருந்து மணிப்பூரில் அரசாங்க வேலை, பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் வேலை, மற்ற துறைகளில் வேலை செய்பவர்களை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவார்கள். அப்படியான திருமணங்களும் நடந்துள்ளது. இவர்கள் நமது இந்திய கலாசாரத்தைத் தழுவி நல்லவிதமாக வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக பஞ்சாபிகளும், மலையாளிகளும், தமிழர்களும் இங்குள்ள பெண்களை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

மோரே மலைவாசிகள் ஆண்டுதோறும் அறுவடை நேரத்தில் அதாவது நவம்பர் மாதம் முதல் தேதியில் ‘கூட் திருவிழா’ கொண்டாடுவார்கள். ஆடிபாடி நடனம் ஆடுவார்கள். அவர்கள் சமூகப் பெண்களுக்கு அழகிப்போட்டிகளும் நடத்தப்பட்டு அழகி தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்குவார்கள். இதே போல் தமிழர்கள் தைத்திங்கள் நாளில் பொங்கல் விழாவினைச் சிறப்பாகக் கொண்டாடிவருகிறார்கள். அப்போது பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளையும் நடத்துகிறார்கள். தமிழர்களின் விழாக்களின் போது மலைவாழ் மக்களின் கலாச்சார நடனமும் நடத்தப்படுகிறது. இவை தவிர தமிழர்களின் அத்தனைப் பண்டிகைகளும் இங்கு சிறப்புறக் கொண்டாடப்படுகின்றன. 

மோராவில் மலைவாழ் மக்கள் சிறிய அளவிலான 29 கிறிஸ்தவ கோவில்களை கட்டியுள்ளனர். 20அல்லது 30 குடும்பத்தினருக்கு ஒரு கோவில் என்ற அளவில் இருக்கிறது. இவர்கள் ஒரு கோத்திரத்தைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு என்று பிரார்த்தனை தலைவர்களும் தனித்தனியாக இருக்கிறார்கள்.

இயற்கையோடு இணைந்து வாழும் இம்மக்களின் சுவாரஸ்யமான வாழ்க்கைக்கு இடையே பிரச்னைகளும் இல்லாமல் இல்லை. இப்பகுதியின் மற்றொரு பூர்வீகக்குடிகளான நாகாக்கள் மோரே தங்களுக்குத்தான் என்று போர்க்கொடி பிடித்ததில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உயிர்ப்பலிகள் நிகழ்ந்துள்ளது. தமிழர்களுக்கும், குக்கீஸ்களுக்கும் இடையே கூட மோதல்கள் ஏற்பட்டிருக்கின்றன.தற்போது இவை மறக்கப்பட்டு எல்லோரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றன.

மோரே தமிழ்ச்சங்கம்

தமிழர்கள் பெருகத் தொடங்கியதும் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி 1967ல் தமிழர் நலச்சேவா சங்கம் தொடங்கப்பட்ட நிலையில்,மூன்று மாதம் கழித்து ஜூலை 15 ம் தேதி புதிய குழு அமைக்கப்பட்டது.இந்த குழு, மோரே தமிழ்ச்சங்கமாக செயல்படத் தொடங்கியது.

இவர்களின் முயற்சியில் பள்ளிக்கூடத்துக்காக ஒரு இடம் வாங்கப்பட்டு நேதாஜி நினைவு ஆங்கில உயர் நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு இன்று வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
மோரே தமிழ்ச்சங்கத்தின் கீழ் வார்டு வாரியாக முத்தமிழ் மன்றம், சன்ரைஸ் யூத் கிளப், பேச்சுலர் வெல்ஃபர் யூத் கிளப், லிப்ரா பீபுள் கிளப் ஆகிய அமைப்புகள் உருவாக்கப்பட்டு பொதுப்பணிகளை தமிழ் இளைஞர்கள் செய்து வருகின்றனர். பெண்களுக்கு இலவச தையல் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் சுனாமி ஏற்பட்டபோது மோரே தமிழ்ச்சங்கம் சார்பில் ரூ.3.60 லட்சம் வழங்கப்பட்டது.2008-ல் பர்மாவில் நர்கீஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரண உதவி அளித்துள்ளனர். 

எப்படி செல்வது மோரேவுக்கு?

மணிப்பூர் மாநிலத்தின் கடைசி எல்லைக் கிராமம் தான் மோரே. அங்கு நாம் செல்ல முதலில் மணிப்பூர் தலைநகர் இம்பால் செல்லவேண்டும். விமானம் மூலமாகவும், ரயில் மூலமாகவும் இம்பால் செல்லமுடியும். விமானத்தில் செல்வதானால் கல்கத்தாவுக்கு முதலில் செல்ல வேண்டும். சென்னை - கொல்கத்தா 2மணிநேரம் விமானப்பயணம். கொல்கத்தாவிலிருந்து இம்பாலுக்கு பயண நேரம் ஒன்றரை மணிநேரம். 

இம்பாலிலிருந்து மோரே 110கி.மீட்டர். இதற்கு தனியார் வாகனத்தில் தான் செல்லமுடியும். ரயிலில் செல்ல சென்னையில் இருந்து செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாட்கள் நாகாலாந்து மாநிலத்தின் டிமாப்பூர் வரை ரெயில்(திப்ருகர் எக்ஸ்பிரஸ்) இயக்கப்படுகிறது.அங்கிருந்து இம்பாலுக்கு பஸ் உள்ளது. இம்பாலிலிருந்து மோரேவுக்கு தனியார் வாகனங்களில் செல்லலாம்.

நன்றி: முத்தமிழ் வேந்தன்

”நேர்மையை விதையுங்கள்.”

”நேர்மையை விதையுங்கள்.”

ஒரு மிகப்பெரிய கம்பெனியின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் கம்பெனியின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.எல்லாரும் தன் ரூமுக்கு வருமாறு கட்டளை இட்டார்.

உங்களில் ஒருவர் தான் என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் ,அதனால் உங்களுக்கு ஒரு போட்டி வைக்க போகிறேன். யார் ஜெயிக்கிறார்களோ அவர் தான் அடுத்த மேனேஜர் என்றார்.

என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன்.இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து அடுத்த வருடம் என்னிடம் காட்ட வேண்டும்.யார் செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ அவரே என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.

அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கி சென்றனர்.அந்த கம்பெனியில் வேலை செய்யும் வாசு வும் ஒரு விதை வாங்கி சென்றான்.தன் மனைவியிடம் முதலாளி சொன்ன அனைத்தையும் சொன்னான்.அவன் மனைவி தொட்டியும் உரம் தண்ணீர் எல்லாம் அவனுக்கு கொடுத்து அந்த விதையை நடுவதற்க்கு உதவி செய்தாள்.

ஒரு வாரம் கழிந்தது ஆபிஸில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தனர்.ஆனால் வாசுவின் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை.

ஒரு மாதம் ஆனது செடி வளரவில்லை, நாட்கள் உருண்டோடின ஆறு மாதங்கள் ஆனது அப்பொழுதும் அவன் தொட்டியில் செடி வளரவே இல்லை.நான் விதையை வீணாக்கிவிட்டேனா என்று புலம்பினான் ஆனால் தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை.தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று ஆபிஸில் யாரிடமும் சொல்லவில்லை.

ஒரு வருடம் முடிந்து விட்டது எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள்.வாசு தன் மனைவியிடம் காலி தொட்டியை நான் எடுத்து போகமாட்டேன் என்று சொன்னான்.அவன் மனைவி அவனை சமாதானப்படுத்தி நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி செய்தீர்கள்.செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை .நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள்.

வாசுவும் காலி தொட்டியை ஆபிஸுக்கு எடுத்து சென்றான்.எல்லார் தொட்டியையும் பார்த்தான் விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன.இவன் தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு சொன்னார்.வாவ் எல்லாரும் அருமையாக செடியை வளர்த்து உள்ளீர்கள் உங்களில் ஒருவர் தான் இன்று பொறுப்பு ஏத்துகொள்ளபோகறீர்கள் என்றார்.எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார்.வாசு கடைசி வரிசையில் நின்றிருந்தான் அவனை அருகே வருமாறு அழைத்தார்.

வாசு தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார் என்று பயந்து கொண்டே சென்றான்.முதலாளி வாசுவிடம் உன் செடி எங்கே என்று கேட்டார்.ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலாவாரியாக சொன்னான்.

முதலாளி வாசுவை தவிர அனைவரும் உட்காருங்கள் என்றார்.பிறகு வாசு தோளில் கையை போட்டுகொண்டு நமது கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர்தான் என்றார்.வாசுவுக்கு ஒரே அதிர்ச்சி தன் தொட்டியில் செடி வளரவே இல்லை பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார் என்று குழம்பிபோனார்.

சென்ற வருடம் நான் உங்கள் ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள்[Boiled seeds]. அந்த விதைகள் அவிக்கப்பட்டதால் அது முளைக்க இயலாது. நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால் அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்தீர்கள்.வாசு மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டான்,ஆகவே அவனே என் கம்பெனியை நிர்வாகிக்க தகுதியானவன் என்றார்.

*If you plant honesty, you will reap trust.
* If you plant goodness, you will reap friends.
* If you plant humility, you will reap greatness.
* If you plant perseverance, you will reap contentment.
* If you plant consideration, you will reap perspective.
* If you plant hard work, you will reap success.
* If you plant forgiveness, you will reap reconciliation.
* If you plant faith in God , you will reap a harvest.

So, be careful what you plant now; it will determine what you will reap later..

“Whatever You Give To Life, Life Gives You Back”

via Ilayaraja Dentist

அன்பால் சிரிப்பவள் அன்னை...!

வெற்றியில் சிரிப்பவன் வீரன்.

கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன்.

துன்பத்தில் சிரிப்பவன் மனிதன்.

மகிமையில் சிரிப்பவன் மன்னன்.

விளையாமல் சிரிப்பவன் வீணன்.

இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன்.

மாண்பில் சிரிப்பவன் பண்பாளன்.

மோகத்தில் சிரிப்பவன் வெறியன்.

கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்.

ஓடவிட்டு சிரிப்பவன் நயவஞ்சகன்.

தெரியாதென்று சிரிப்பவன் நடிகன்.

நின்று சிரிப்பவன் நினைவுள்ளவன்.

ஓயாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன்.

கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்.

கொடுக்கும்பொழுது சிரிப்பவன் சூழ்ச்சியாளன்.

இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி.

நினைவோடு சிரிப்பவன் அறிவாளி.

தெரியுமென்று சிரிப்பவன் பசப்பாளி.

இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி.

குழைந்து சிரிப்பவன் சந்தர்ப்பவாதி.

நிலைகண்டு சிரிப்பவன் காரியவாதி.

அருளுக்கு சிரிப்பவன் ஆண்டி.

தற்பெருமையில் சிரிப்பவன் கோழை.

நிலை மறந்து சிரிப்பவள் காதலி.

காதலால் சிரிப்பவள் மனைவி.

அன்பால் சிரிப்பவள் அன்னை...!

Monday, March 25, 2013

படித்ததில் பிடித்தது

ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நிதிமன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது.

குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதோ, அவரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழியே உள்ளே வரப் போகிறார். நீங்கள் அதைப் பார்த்த பின்பு, இவர் குற்றமற்றவர் என்பதை உணர்வீர்கள்” என்று கூறி அமர்ந்துவிட்டார்.

நீதிபதி உட்பட எல்லோரும் நீதிமன்றக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 5 நிமிடம், 10 நிமிடம் கழிந்தது. ஒருவரும் வரவேயில்லை. இப்போது வழக்கறிஞர் எழுந்தார்.

“மைலார்ட்! நீங்கள் உட்பட யாருமே காணாமல் போனவர், கொலைதான் செய்யப்பட்டவர் என்பதை முழுமையாக நம்பவில்லை. அதனால்தான் எல்லோரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள். எனவே, உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறிவிட்டு கம்பீரமாக அமர்ந்தார்.

பிற்பகலில் நீதிபதி தீர்ப்பை வாசித்தார். குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை அளித்தார். வக்கீல் எழுந்து, “எப்படி மைலார்ட்?” என்று கேட்டார்.

அதற்கு நீதிபதி சொன்னார், “அந்த பத்து நிமிடமும் நான் வாசலைப் பார்த்தது உண்மைதான். ஆனால், ஒருதடவை கூட குற்றம் சாட்டப்பட்டவர் வாசலைப் பார்க்கவில்லை.”

- படித்ததில் பிடித்தது 

via - ராஜேஷ் 'பலவேஷம்'

மக்கள் இதை உணர்ந்து வாழவேண்டும்...!

ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார்..

ஒருநாள் 'ஆபீஸ்' போய் வேலை செய்து பார். சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்..

அவள் ஒருநாள் பொறுமை இழந்து, ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்கோங்க.. காலைல
குளிப்பாட்டி சாப்பிட வச்சு, வீட்டுப் பாடங்கள் சொல்லிக்கொடுத்து சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க. அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும் செஞ்சுதான் பாருங்களேன். என எதிர் சவால்விட்டாள்..

கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்..

அவன் வீட்டில் இருக்க இவள் ஆபீஸ் போனாள். ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ். முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள். வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய் வருபவர்களை கண்டித்தாள். கணக்கு வழக்குகளைப் பார்த்தாள்..

மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட நினைத்தபோது, ஓர் அலுவலரின் மகள் திருமண வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல, பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு கல்யாண மண்டபத்திற்கு சென்றாள்..

கணவர் வராததற்கு பொய்யான காரணம் ஒன்றை சொல்லிவிட்டு, மணமக்களின் கட்டாயத்தால் சாப்பிட சென்றாள். பந்தியில் உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம் வீட்டைப் பற்றியே..

இலையில் வைத்த 'ஜாங்கிரியை' மூத்தவனுக்கு பிடிக்கும் என்று கைப்பையில் எடுத்து வைத்தாள். முறுக்கு கணவனுக்குப் பிடிக்குமே என்று அதையும் கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள். அவள் சாப்பிட்டதை விட, பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் என பைக்குள் பதுக்கியதே அதிகம்..

ஒரு வழியாய் வீடு வந்து இறங்கியவள், கணவன் கையில் பிரம்போடு கோபத்துடன் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள்..

இவளை பார்த்ததும், பிள்ளையா பெத்து வச்சிருக்க..? அத்தனையும் குரங்குகள். சொல்றதை கேட்க மாட்டேங்குது. படின்னா படிக்க மாட்டேங்குது. சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது. அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல படுக்க வச்சிருக்கேன். பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள கெடுத்து வச்சிருக்கே என்று பாய..

அவளோ, அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா. என்றவாறே உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள். உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய் பிள்ளைகள். விளக்கை போட்டவள் அதிர்ச்சியுடன்,

‘ஏங்க.. இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க..? இவன் எதிர்வீட்டு பையனாச்சே ‘ என்று அலற. ஓஹோ , அதான் ஓடப் பார்த்தானா..! என கணவன் திகைக்க..

அந்த நிலையில் இருவருக்கும் ஒன்று புரிந்தது. இல்லாள் என்றும் , மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம் தொடங்கி நம் மூதாதையர்கள் சொல்வது சும்மா இல்லை...

இல்லத்தைப் பராமரிப்பதிலும் பிள்ளைகளுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும் ஒரு பெண்ணின் பங்கு தலையாயது. அதுபோல, பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும் அளப்பரியது..

ஆனால் இருவரும் வேலைக்கு செல்லும் இந்த காலத்தில் இது ஆணுக்கு, இது பெண்ணுக்கு என்று குடும்பப் பொறுப்புகளை இனம்பிரிக்க இயலாதபடி வாழ்க்கை சமத்துவம் ஆகிவிட்டது..

இந்த சூழ்நிலையில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் கணவன்மீது மனைவியோ, மனைவி மீது கணவனோ ஆதிக்கம் செலுத்தாமல் அன்பால் சாதிக்கும் மனநிலையை கொண்டிருந்தால் தான் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ
முடியும்...

எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ..?

ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது...

கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை. வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார் பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.

மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து "அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?" என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார்.

வெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துகொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார்

அப்பொழுதுதான் அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம்
" ஐ லவ் யூ அப்பா".

மனிதர்களை பயன்படுத்துகிறோம்,பொருட்களை நேசிக்கிறோம்...

Thursday, March 7, 2013

உங்களுக்கென்ன சார் ஐ.டில இருக்கீங்க!!!

"உங்களுக்கென்ன சார் ஐ.டில இருக்கீங்க" இதை சர்வசாதாரணமாக சொல்லிவிடுகிறார்கள்.

ஐ.டி என்பதை அகராதியில் புதிதாகச் சேர்த்தால் "ஆகச் சிறந்த அடிமை முறையை உருவாக்குதல்" என்று சேர்க்கலாம். அமெரிக்காவில் செட்டில் ஆவதும், இங்கிலாந்துக்கு ஆன்சைட் போவதுமாக கனவுகள் விதைக்கப்பட்ட மிடில் கிளாஸ் மாதவன்களை கேம்பஸ் இண்டர்வியூ என்ற பெயரில் கொத்தி வரும் இந்த நிறுவனங்கள் இலட்சத்தில் ஒருவனாக மாற்றுகின்றன. முதன் முதலாக ஐ.டி அலுவலகத்தில் நுழைபவர்களை பார்த்திருக்கிறீர்களா? பளிச் ஷூவும், புதிய சட்டையும், கழுத்தில் டையும், பேச்சில் பதட்டமும், கண்களில் கனவுகளுமாக வந்து சேர்வார்கள். வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டதாக 16 எம்.எம்மில் படம் ஓடிக் கொண்டிருக்கும். ஆனால் உண்மை குரூரமானது.

கொத்தி வந்த இலட்சத்தையும் மந்தையாக மாற்றும் அடுத்த படலம் 'ட்ரெயினிங்'. இந்த வேலை நிரந்தரமில்லை என்றும் மேனேஜர் நினைத்தால் எப்பொழுது வேண்டுமானாலும் உங்களை நிறுவனத்தை விட்டு வெளியேற்றலாம் என்பதையும் ஆழமாக பதிப்பிக்கிறார்கள். இனி கேள்வியே கேட்கக் கூடாது என்பதுதான் இதில் சொல்லித்தரப்படும் தாரக மந்திரம். இந்த பயிற்சி முடியும் போது கிட்டத்தட்ட மெஷின்களாகியிருப்பார்கள். இந்த மெஷின்கள் காலையிலிருந்து நள்ளிரவு வரை உழைப்பதற்கு தயாராகிவிடும். பட்டினி போடப்பட்ட நாயின் நெற்றிக்கு முன்னால் எலும்புத் துண்டை கட்டித் தொங்கவிடுவது போல பதவி உயர்வு, சம்பள உயர்வு, வெளிநாட்டுப்பயணம் போன்ற துண்டுகளை கட்டித் தொங்கவிடுவார்கள். கிடைக்காத துண்டுகளை பிடித்துவிட நாய்கள் ஓடத் துவங்குகின்றன.

எத்தனைதான் மழை பெய்தாலும் வறட்சிப்பாடலை பாடும் கர்நாடகாவைப் போல, எத்தனைதான் க்ளையண்ட்களை பிடித்திருந்தாலும் மார்ச் மாதத்தில் மட்டும் மேனேஜர்களுக்கு 'ரிஸசன்' ஞாபகத்திற்கு வந்துவிடும். நிறுவனத்தின் இலாபத்தை அதிகரிக்க- (நஷ்டத்தை குறைக்க இல்லை என்பதை கவனிக்க) நாம் இந்த ஆண்டு சம்பள உயர்வை தியாகம் செய்ய வேண்டும் என்று பஞ்சப்பாட்டு பாடுவார்கள். ஒற்றை இலக்க சம்பள உயர்வு கிடைத்தால் ஜென்மசாபல்யம் அடைந்துவிட வேண்டும் ஒன்றும் கிடைக்கவில்லையென்றால் தனக்குள் மட்டும் புலம்பிக் கொண்டு அடுத்த வருடம் எலும்புத்துண்டு கிடைக்கலாம் என்று ஓட வேண்டும்.

இடையில் சம்பள உயர்வு கிடைக்காத ஊழியர்களிடம் ஏதாவது தொய்வு தென்படுகிறது என்றால் மனிதவள மேலாண்மையைச் சேர்ந்த லார்டு லபக்குதாஸ்களை சர்வசாதாரணமாக பார்க்க முடியும். ஒவ்வொரு கிளையிலும் கொஞ்சம் பேரை எந்த முன்னறிவிப்புமின்றி வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள். எங்கே நம்மையும் அனுப்பிவிடுவார்களோ என்று மற்ற அடிமைகளுக்கு ஜெர்க் கொடுப்பதற்கான செயல்பாடு இது. முன்னைவிடவும் அடிமைகளிடம் வேகம் அதிகரித்திருக்கும். மேனஜர்களிடம் குழவ வேண்டியிருக்கும்.

அருகில் இருந்தவனை அனுப்பிவிட்டார்கள்; நல்லவேளையாக நம்மை விட்டுவிட்டார்கள் என்று திருப்திப்பட்டுக் கொள்வார்கள். "நமக்கு பிரச்சினை இல்லாத வரைக்கும் சரி" என்ற இந்த மனநிலைதான் நிறுவனத்திற்கு வெளியேயும் ஐ.டி ஊழியர்களிடம் எதிரொலிக்கிறது. இதே நிலைப்பாடுதான் ஒரு கட்டு கீரை வாங்குவதிலிருந்து வீட்டுவாடகை உயர்வு வரைக்கும் பேரம் பேசத்தெரியாத தன்மையை அல்லது பேரம் பேச பயப்படும் மனநிலை ஐ.டி.வாலாக்களிடம் உருவாக்கிவிடுகிறது. உடல்நலத்தையும், மனநலத்தையும் கெடுத்து பெற்றுக் கொண்ட பணத்தை "ஐ.டிலதானே இருக்கீங்க" என ஆட்டோக்காரரில் ஆரம்பித்து சூப்பர் மார்கெட் வரை உறிஞ்சுவதை எந்தக் கேள்வியும் கேட்காத தைரியமின்மையை இந்த துறை கற்று கொடுத்திருக்கிறது.

ஐ.டி என்றாலே இலட்சக்கணக்கில் சம்பளம் என்பதும் மாயைதான். பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் பல்லாயிரக்கணக்கான அடிமைகள் இருக்கிறார்கள். பெங்களூரில் ஓடும் ஆட்டோக்காரர்களைவிடவும் குறைவாக சம்பாதிக்கும் ஐ.டி.ஊழியர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதை யாரும் கவனிப்பதில்லை. பல மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் ஐ.டிக்காரர்களை விட அதிகம் என்பதுதான் நிதர்சனம். ஆனால் ஒட்டுமொத்த விலையுயர்வும் ஐ.டியால்தான் என்பது போல இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை சர்வசாதாரணமாக பார்க்கலாம்.

ஐ.டிக்காரர்களிடம் தங்களின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை இல்லை. எப்பொழுது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற அச்சம்தான் அவர்களின் அத்தனை சமூக செயல்பாடுகளுக்கும் (Social Behavior ) அடிப்படையான காரணம் என்பது பற்றி யாரும் விவாதிப்பதில்லை. செலவு செய்கிறார்கள் என்பதையும், ஊதாரிகளாகத் திரிகிறார்கள் என்பதையும் இந்தக் கோணத்தில் இருந்தே பார்க்க வேண்டும். உண்மையில் ஒவ்வொரு ஐ.டி ஊழியரிடமும் அவருக்கே தெரியாத பதட்டமிருக்கிறது.

வாழ்க்கையின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையின்மைதான் இவர்களின் கோபமாக மாறிக் கொண்டிருக்கிறது. கோபம் என்றால் சாலையில் உரசிப்போகும் வாகன ஓட்டிகளிடமும், க்யூவில் முந்திச் செல்பவர்களிடமும் காட்டும் கோபம். யாரிடம் கோபத்தை காட்டினால் தனக்கு எந்தப்பிரச்சினையும் வராதோ அவர்களிடம் மட்டும் காட்டும் கோபம். உண்மையில் இந்தக் கோபத்தினால் அவர்களால் எதையுமே சாதிக்க முடியாது. இது அவர்களுக்கும் தெரியும். ஆனால் தங்களின் அத்தனை அழுத்திற்கும் ஒரு வடிகால் வேண்டுமில்லையா?

சாலைகளில் ஐ.டி நிறுவன ஊழியர்கள் சண்டையிடுவதை கவனித்திருக்கிறீர்களா? வீட்டில் மற்றவர்களிடம் கோபம் காட்டுவதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? துணிந்து கை நீட்ட முடியாத தைரியமின்மையின் வெளிப்பாடுதான் இந்தச் சண்டைகள்.

உண்மையில் ஐ.டியில் வேலை செய்பவர்கள்- கேள்வி கேட்க துணிச்சலில்லாத, துணிந்து சண்டையிட முடியாத, பலசாலிகளிடம் பம்மும் அப்பிராணிகள். பாவப்பட்ட ஜென்மங்கள். அடுத்த முறை "ஐ.டிலதானே வேலை செய்யறீங்க?" என்ற கேள்வியைக் கேட்காதீர்கள். அது பார்வையற்றவனிடம் "நீ குருடன் தானே" என்று கேட்பதற்கும், பேச முடியாதவனிடம் "நீ ஊமைதானே' என்று கேட்பதற்கும் சமம்.

நன்றி : வா.மணிகண்டன் 

Tuesday, March 5, 2013

NAMAKKAL SCHOOLS – COLLEGE MARKS – PLACEMENT THREATS!

நாமக்கல் பிராய்லர் பள்ளிகள்..!
பள்ளிப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் தினசரி செய்தித்தாள்களைக் கவனிக்கும் எவருமே ‘நாமக்கல் பள்ளிகளின்’ விளம்பரங்களை அடிக்கடி காணலாம். நாமக்கல் நகரப் பள்ளிகளின் சார்பாக வெளியாகும் அவ்விளம்பரங்களில் அந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்வுகளில் அவர்களிடம் படித்த மாணவர்கள் எத்தனை பேர் சாதனை படைத்துள்ளார்கள் என்கிற விவரங்கள், புகைப்படங்களோடு வெளிவந்திருக்கும். கூடவே அந்தப் பள்ளிகளின் இமாலய வசதிகள், மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களும் இடம் பெற்றிருக்கும்
அந்த விளம்பரங்களின் சாராம்சம், “எங்களிடம் படிக்கப் போகும் உங்கள் பிள்ளைகளுக்கு தேர்வுகளில் மாநில அளவில் முதலிடம் பெற்றுத்தருவது லட்சியம் – இல்லா விட்டால் நல்ல கல்லூரியில் இடம் கிடைப்பதாவது நிச்சயம்” என்பது தான். இந்த லட்சியத்தை எட்டுவதற்கான விலை சில லட்சங்களில் இருக்கும் – அது அந்தந்த பள்ளியின் முந்தைய சாதனைகளையும், பாரம்பரியத்தையும் பொறுத்து கொஞ்சம் கூடக்குறைய இருக்கலாம். இது போக பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் மாநில அளவில் சாதனை படைக்கும் மாணவர்களுக்கென தனிச் சலுகைகளும் உண்டு.
நாமக்கல் பள்ளிகள் நடுத்தர வர்க்கப் பெற்றோரின் கனவு. அவர்தம் வாழ்க்கை லட்சியங்களை எட்டுவதற்கான உத்திரவாதமான ஏணி. பல பெற்றோர்கள் இந்த விளம்பரங்களால் கவரப்பட்டு, இந்தப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள். இது போன்ற பள்ளிகள் மாணவர்களைத் தயாரிக்கும் விதம் தனிச்சிறப்பானது.
இம்மாணவர்கள் உள்ளூரிலேயே இருந்தாலும் பள்ளி விடுதிகளில்தான் தங்க வேண்டும். இவர்களின் ஒரு நாள் வாழ்க்கை அதிகாலையில் துவங்கி இரவு வரையில் நீளும். ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு மாதிரித் தேர்வுகள் இருக்கும். வகுப்பில் உடன்படிக்கும் மாணவர்களோடு பேசத் தடை; ஆசிரியர்களோடு மதிப்பெண் பெறுவதைத் தாண்டி பாட சம்பந்தமான வேறு சந்தேகங்களைக் கூட கேட்கத் தடை; விளையாடத் தடை, சிரிக்கத் தடை, அழத் தடை, டி.வி பார்க்கத் தடை; மாணவர்களைப் பெற்றோர்கள் சுதந்திரமாக வந்து சந்திக்கத் தடை, மதிப்பெண்களைத் தாண்டி வேறெதையும் சிந்திக்கவும் கூட தடை. சுருக்கமாகச் சொன்னால் நாமக்கல் பள்ளிகள் என்பது மதிப்பெண் இயந்திரங்களைத் தயாரிக்கும் கொத்தடிமைக் கூடங்கள்.
இங்கே நடத்தப்படும் மாதிரித் தேர்வின் வினாத்தாள்களைத் தயாரிப்பதும், விடைத்தாள்களைத் திருத்துவதும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள். பெரும்பாலும் அந்தந்த வட்டாரங்களில் இருக்கும் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளின் ஆசிரியர்கள், அரசாங்க சம்பளத்தையும் வாங்கி கொண்டு இது போன்ற பள்ளிகளிலும் பணிபுரிகிறார்கள். ஒரு சில தனியார் பள்ளிகளில் அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் மறைமுகமான பங்குதாரர்களாகவும் இருக்கிறார்கள். இது போன்ற ஆசிரியர்களைக் கொண்டே வகுப்புகளும் நடத்தப்படுகின்றது.
நாமக்கல் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கும் பெற்றோரின் ஒரே லட்சியம் – அதிக மதிப்பெண்கள். ஓரிரு ஆண்டுகள் நீடிக்கும் இந்தக் கொத்தடிமை வாழ்க்கையை எப்பாடுபட்டாவது தங்கள் பிள்ளைகள் சகித்துக் கொண்டால் அதன் பின் ஒளிமயமான ஒரு எதிர்காலம் உத்திரவாதம் என்கிறார்கள்.
இந்தக் கொத்தடிமை வாழ்வின் விதிகள் திணிக்கப்படும் மாணவர்களில் பெரும்பாலானோர் கடுமையான உளவியல் சிக்கல்களுக்கு உள்ளாகிறார்கள் என்றும், மாணவர்களின் விடலைப் பருவ வாழ்க்கை கெட்டுப் போகிறது என்றும், இவர்களெல்லாம் உலகமே அறியாத கிணற்றுத் தவளைகளாகவும், ப்ராய்லர் கோழிகளைப் போன்றும் உருவாகிறார்கள் என்றும் சில முதலாளித்துவ பத்திரிகைகளே எச்சரிக்கை செய்கின்றன.
ஆனால் இந்த எச்சரிக்கைகளையும், அதன் விளைவுகளையும் எல்லாம் பெற்றோர்கள் முழுமையாக அறியாதவர்கள் என்று சொல்லி விட முடியாது. ஒரு சிறப்பான எதிர்காலத்தை அடைவதற்கு இது போன்ற சின்னச் சின்ன தியாகங்களைப் பிள்ளைகள் சகித்துக் கொள்ளத் தான் வேண்டும் என்கிறார்கள் பெற்றோர்கள். மேலும், இப்போது சில லட்சங்களைச் செலவு செய்து விட்டால், பின்னால் மருத்துவமோ பொறியியலோ சேர்க்கும் போது ‘மெரிட்டில்’ சேர்த்து விட முடியும்; எப்படியாவது 90 சதவீதத்திற்கு மேல் தம் பிள்ளை மதிப்பெண்களை வாங்கிவிட்டால் மருத்துவம், பொறியியல் தவிர்த்த வேறு படிப்புகளில் சேர்க்கும் போது செலவு குறைவாக இருக்கும் என்கிறார்கள்.
கடும் உளவியல் சிக்கல்களுக்கு உள்ளாகும் மாணவர்கள் சிலர், அதன் பின் எதற்கும் பயன்படாத தக்கைகளாக சமூகத்தினுள் துப்பப்படுகிறார்கள். சிலர் தற்கொலை முடிவுகளைக் கூட நாடுகிறார்கள். இந்தப் பள்ளிகளின் கொடுமை தாளாத சில மாணவர்கள் லேசாகச் சுணங்கினாலும், அவனது பெற்றோரை வரவழைத்து ‘இது தேறாத கேசு’ என்கிற பாணியில் பள்ளிகள் அச்சுறுத்துகின்றன. லட்சங்களை அள்ளிக் கொடுத்து, இந்தக் கல்வி வியாபாரிகளின் கொழுப்பு கூட காரணமாய் இருக்கும் பெற்றோர்களோ, இது போன்ற பெற்றோர் – ஆசிரியர்கள் சந்திப்புகளில் பம்மிப் பதுங்கி, பிச்சைக்காரர்கள் போல் சுயமரியாதையற்று நிற்கிறார்கள் என்று இப்பள்ளிகளின் நடைமுறைகளை நன்கு அறிந்த நண்பர் ஒருவர் கூறினார்.
நாமக்கல் பள்ளிகள் என்று இங்கே நாம் குறிப்பிட்டாலும், இதே போல் மதிப்பெண்களைக் குறிவைத்து மாணவர்களைத் தயாரிக்கும் மதிப்பெண் தொழிற்சாலைகள் தற்போது தமிழகமெங்கும் பரவி வருகின்றன. விருத்தாச்சலத்தில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவன் தட்சிணாமூர்த்தியின் மரணமே அதற்கு சமீபத்திய உதாரணம்.
எனினும் நாமக்கல் பிராய்லர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவருமே இந்தப் பள்ளிகள் உத்திரவாதமளிப்பது போல் அதிக மதிப்பெண்களைப் பெறுவதில்லை என்பதே எதார்த்தம். குறிப்பிட்ட இரண்டாண்டுகளில் இம்மாணவர்கள் அனுபவிக்கும் சித்திரவதைகள் அவர்களை வேறொரு வகையில் உளவியல் ரீதியில் தயார் செய்கின்றது. அடிமைத்தனம், பந்தயத்தில் வெற்றி பெற்றேயாக வேண்டிய வெறி, காரியவாதம், சமூக உறவுகளின்மை என்று பலவற்றை அந்த மாணவர்கள் பெறுவதோடு, வாழ்க்கை முழுவதும் அப்படியே வாழவும் வேண்டியிருக்கிறது.

இலக்கைத் துரத்தும் இந்த ஓட்டம் பள்ளியோடு மட்டும் நின்று விடுவதில்லை. கல்லூரியில் அது இன்னும் மேம்படுத்தப்பட்டு மெருகூட்டப்படுகிறது. கேம்பஸ் தேர்வில் வெல்வது அங்கே குறிக்கோள். அதுவும் புகழ்பெற்ற பன்னாட்டுக் கம்பெனியின் தேர்வு என்றால் இன்னும் சிறப்புக் கவனம். கல்லூரியில் கேம்பஸ் தேர்வுக்கு மாணவரை அனுப்பும் அதிகாரம் கொண்ட பேராசிரியர்களிடம் (Placement officers) ‘வம்பு’ வைத்துக்கொள்ளக் கூடாது; கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்துப் பெயரைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது. மற்றபடி உரிமையைக் கேட்பதைப் பற்றியோ, அதற்காகப் போராடுவதைப் பற்றியோ கற்பனையாகக் கூட சிந்திக்க முடியாது – கூடாது.
இதையும் தாண்டி, இண்டர்னல் மதிப்பெண்கள், ரிக்கார்டு மதிப்பெண்கள், ப்ராஜக்ட் மதிப்பெண்கள் என்று ஒரு மாணவனை அச்சுறுத்தி, அடக்கி வைக்க வேறு பல்வேறு வழிமுறைகளும் கல்லூரிகளில் நடைமுறையில் உள்ளது. நாமக்கல் பள்ளிகளும் சரி, முன்னாள் சாராய ரவுடிகள் நடத்தும் கல்லூரிகளும் சரி, எல்லாமும் எல்லா வசதிகளையும் கொண்டிருப்பதில்லை. மாணவர்களிடம் வசூல் அதிகரிப்பதற்கேற்பவே அந்த வசதிகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கொண்டு வரப்படுகின்றன.
ஒன்பதாம் வகுப்பிலிருந்தே ஒரு மாணவனை இந்த மனப்பான்மைக்கு உளவியல் ரீதியில் தயாரிப்பதில் கல்வி நிறுவனங்கள் பிரதான பாத்திரம் வகிக்கின்றன. இதில் நாமக்கல் பள்ளிகள் ஒரு எடுப்பான உதாரணம் தான். மற்ற இடங்களில் வழிமுறைகள் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும், நோக்கம் இது தான். பள்ளிகள் பயிற்றுவிக்கும் முறைகளால் உளவியல் ரீதியிலான தாக்குதல் ஒருபுறமென்றால் இதன் பின்னே செய்யப்படும் செலவுகளின் பொருளாதாரத் தாக்குதல் இன்னொரு புறம். பள்ளியில் சேர சில லட்சங்கள் மொய் வைக்கப்படுகிறது என்றால், மருத்துவம் போன்ற உயர் கல்விகளுக்காக பல லட்சங்களில் ஆரம்பித்து சில கோடிகள் வரை செலவு செய்யப்படுகிறது.
தற்போது மதிப்பெண் தொழிற்சாலைகள் வேகமாகப் பெருகி வருவதாலும், பல பெற்றோர்கள் தனிச்சிறப்பான கவனமெடுத்தும் செலவு செய்தும் மாணவர்களைத் தயாரிப்பதாலும் மருத்துவம் போன்ற உயர் படிப்பில் சேர்வதற்கான குறைந்தபட்ச (Cut&off) மதிப்பெண்களை எடுக்கும் மாணவர்களின் சதவீதம் கூடியிருக்கின்றது. 96 சதவீதம் எடுக்கும் மாணவன் கூட தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டில் (management quota) தான் சேர முடிகின்றது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பலருக்கும் வங்கிகள் அளிக்கும் கல்விக்கடன்கள் தான் ஒரே வாய்ப்பு.
படித்து முடித்து விட்டு, சமூகத்தினுள் காலடியெடுத்து வைக்கும் போதே தலைக்கு மேல் லட்சக்கணக்கில் கடனை வைத்துக்கொண்டு ஒரு அழுத்தத்தோடு தான் நுழைகிறார்கள். ஒரு பக்கம் போட்ட காசை சீக்கிரத்தில் எடுத்து விட வேண்டும் என்கிற நெருக்கடி – இன்னொரு பக்கம் பள்ளி, கல்லூரிகளிலிருந்து கற்றுக்கொண்டு வந்துள்ள அடிமைப் புத்தி. இவையிரண்டும் ஒன்றை ஒன்று பரஸ்பரம் வளர்த்துக் கொண்டு,முடிவில் காரியவாதமாகவும், தனிநபர்வாதமாகவும் பரிணமிக்கிறது.
மிகச் சரியாக இது போன்ற ‘தயாரிப்புகளைத்’ தான் பன்னாட்டுக் கம்பெனிகள் விரும்புகின்றன. உலகமயமாக்கலின் விளைவாய் சந்தையும், உற்பத்தியும் கூட உலகமயமாகியுள்ளது. இந்தியாவின் பெங்களூருவிலோ சென்னையிலோ உள்ள பன்னாட்டுக் கம்பெனியின் கிளையில் இருந்து ஒரு பொருளின் அல்லது ஐ.டி சேவையின் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடும் ஊழியர், அதன் முழுமையான தொழில்நுட்பத்தை அறிந்திருக்க வேண்டியது அவசியமற்றதாகின்றது.
ஒரு பொருளின் உற்பத்தின் பல்வேறு கட்டங்கள் சின்னச் சின்ன கட்டங்களாகப் பிரித்து (smaller processes) வெவ்வேறு குழுக்களால் செய்யப்படுகிறது. அதன் உச்சபட்சமான தொழில்நுட்ப இரகசியம் அமெரிக்காவிலோ, வேறு ஐரோப்பிய நாட்டிலோ இருக்கும் தலைமையகத்தில் உள்ளவர்களுக்குத் தான் தெரிந்திருக்கும்.
இந்தச் சூழலில் இங்கே பணிபுரிவதற்காகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்,எந்தக் கேள்வி முறையுமின்றி சொன்னதைச் செய்தாலே போதுமானது. சொந்தமான மூளையோ, சிந்திக்க வேண்டிய அவசியமோ தேவையில்லை. இதில் ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு (Target)நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அதை வாராந்திரமாகவோ, தினசரியோ பரிசீலித்து ஊழியர்களை விரட்ட சில கங்காணிகள் இருப்பார்கள். இந்த உலகத்தின் விதிகள் மிகவும் எளிமையானது. சொன்னதைச் செய்ய வேண்டும் – அதில் இலக்கை எட்ட வேண்டும். குறுக்கே கேள்விகள் கேட்பதோ, உரிமைகள் பற்றிப் பேசுவதோ, அதற்காகப் போராடுவதோ கூடவே கூடாது. சுருங்கச் சொன்னால் பஞ்சு மூளைகள் கொண்ட தக்கை மனிதர்களே உலகமயமான உற்பத்தி நடவடிக்கைகளுக்குப் போதுமானவர்கள்.

தங்கள் நிலத்தை விற்று, நகை நட்டுகளை அடகு வைத்து, போதாததற்கு வங்கிகளிடம் கையேந்தி கல்விக் கடன் பெற்று, லட்சக்கணக்கில் செலவு செய்து, ’தங்கள் பிள்ளைகளுக்கு இருப்பதிலேயே ஆகச் ‘சிறந்ததைக்’ கொடுக்க வேண்டும்; தனது பிள்ளைகளுக்கு நல்ல அறிவாற்றல் கொண்ட மூளை வேண்டும்’ என்றெல்லாம் கனவு காணும் பெற்றோர்கள், அந்த சிறந்த உலகத்தில் அறிவாற்றலுக்கும், மூளைக்கும் வேலையே இல்லையென்பதை அறிந்திருப்பதில்லை. பன்னாட்டுக் கம்பெனிகளால் பொறுக்கியெடுக்கப்படும் தேர்ந்த மதிப்பெண் இயந்திரங்களின் வேலைக்கான உத்திரவாதமென்பது அவர்களது சொந்த உழைப்பினால் விளைந்த பலன் என்று அவர்களே நம்பிக் கொள்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல.
நாமக்கல் பள்ளிகளைப் போன்றே நடத்தப்படும் வேறு பல மதிப்பெண் தொழிற்சாலையிலிருந்தும் உற்பத்தி செய்யப்பட்டு சமூகத்தினுள் அறிமுகமாகும் ‘தயாரிப்புகள்’ பன்னாட்டு மூலதனத்துக்கு மட்டுமல்ல; அவர்களின் சேவகர்களான இந்திய ஆளும் வர்க்கத்துக்கும் மிக உவப்பான குடி மக்கள். இந்த அடிமை இயந்திரங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை இன்று பழைய சாராய முதலைகளும், திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளுமே பெரும்பாலும் நடத்தி வருகிறார்கள். நல்ல லாபம் கொழிக்கும் இந்தத் தொழிலில் நுழைவதற்குத் தயாராக பன்னாட்டுக் கல்வி நிறுவனங்களும் வரிசைகட்டி நிற்கின்றன.
இப்போது முடிவு செய்ய வேண்டியது நாம் தான். நமது பிள்ளைகள் அறிவு பெற கல்வியளிக்கிறோமா அல்லது அடிமையாவதற்காகக் கல்வியளிக்கிறோமா? அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குறைந்த பட்சமாகவாவது ஒரு சமூக அறிமுகம் கிடைக்கிறது. அவர்களுக்கு பல்வேறு வர்க்கத் தட்டைச் சேர்ந்தவர்களோடு பழகவும், அவர்களது வாழ்க்கையை அறிந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கிறது. பள்ளிக்குச் செல்வது மதிப்பெண்களைப் பெறுவதற்காக மட்டுமா அல்லது மனித ஆளுமையை உருவாக்கிக் கொள்வதற்கா? அதைச் சில முதலாளிகள் தீர்மானிப்பதா ? என்பதைப் பெற்றோர்கள் முடிவு செய்யட்டும்.
Credits :வினவு

50 things to do in Tamil Nadu

How many of us have a bucket list of places to go and things to do there but never get around to actually going there or doing them. Yahoo! India reader Thennarasu wrote to us with an invitation to his home state, Tamil Nadu, with this list of 50 things to do while you're there.
1. Eat a meal on a banana leaf — there's a belief that it might cure Parkinson 's disease
2. Visit the Great Living Chola Temples, the UNESCO World Heritage Site dating back to the 10th century
On a cold morning, a crowd of people rush to board the 662SR Mettupalayam-Udhagamandalam (Nilagiri) Passenger.PAWAN KOPPA is an IT professional who is a full-time techie on weekdays while transforming... more 
1 / 22
| Photo by Pawan Koppa / IRFCA
Share to FacebookShare to PinterestShare to Twitter
3. Go to Ooty on the Nilgiri Mountain Railway — it is a UNESCO World Heritage Site and a legacy of remarkable British engineering
4. Get blessed by an elephant — how often can you get one?
5. Visit the Cholamandalam Artists' Village, the pride of modern Tamil Art
6. Take an auto ride in Chennai. Chennai auto-drivers even have their own websites. Plus, it is the luxury of the middle-class.
7. Taste idli and dosa and wonder how many types of chutneys exist in Tamil Nadu. We are really a bunch of choosy pickers when it comes to idli and dosa!
8. Watch a Rajanikanth film in a movie theatre, if possible on the first day to understand the definition of hero worship!
9. Participate in Jallikattu -- bull taming -- in Madurai. Or, if you're chicken, just watch!
10. Find and listen to your favourite Ilayaraja or A R Rahman song — everybody's got to have one!
11. Men, sport a moustache. And women, plait your hair and decorate it with a garland of fragrant jasmine flowers!
12. Decorate the front of your house with kolam — a more decorative and artistic rendition of rangoli -- and hang bunches of harvested paddy outside your home for the birds to feed on. (We have our own homegrown Kolam Picassos, and the patterns they come out with are astonishing!)
13. Drink strong filter coffee In a Tamil-style cup and saucer known as davarah and tumbler
The five rathas at Mahabalipuram. Click for more photos.The five rathas at Mahabalipuram. Click for more photos.
14. Visit the shore temples of Mahabalipuram (another UNESCO World Heritage Site of the 7th century) and admire the art of sculpting in this little town
15. Wander around to wonder at the Indo-Saracenic and Gothic style buildings of Chennai, some of which are over a hundred years old
16. Visit Pondicherry to marvel at the French Architecture (and our own French Connection)
17. Beat the heat by eating all your summer fruit glazed with a layer of salt-and-chilli-powder mixture! Cucumber, unripe mango, gooseberry, guava and pineapple taste best like this. And drink tender coconut or buttermilk or sugarcane juice to quench your thirst. And if you like it aerated, there's Bovonto, our very own answer to Coca Cola!
18. Shop for beautiful silk sarees at Kancheepuram (the Chinese may have invented silk, but Tamils perfected it)
19. Celebrate Pongal by cooking sweet rice outdoors in clay pots or join the annual celebration of Elephant Pongal at Top Slip
20. Buy Horlicks for someone sick
21. Feed crows on special occasions
22. Whistle for Chennai Super Kings at M A Chidambaram stadium!
23. Attend Thiruvaiyaru Music Festival
24. Visit Pichavaram, the world's second largest mangrove forests, for the Dawn Fest or Vidiyal Vizha
25. Sanctify your new dresses with turmeric
The imposing Matri Mandir at Auroville26. Visit Auroville, the international commune near Pondicherry
27. Visit the Toda tribal village in the Nilgiris (also learn about the other tribes -- Badaga, Irula, Kota and Kurumba)
28. Go to Natyanjali Dance Festival celebrated at the 1,000-year-old Chidambaram temple near Cuddalore. The dance hall is adorned with pillars exhibiting the classic 108 poses of Lord Nataraja.
29. Go on a parisal (coracle) ride in Hogenakkal
30. Watch the magical kurinji flower bloom in Kodaikanal. It blooms every 12 years and the next bloom is in 2018
31. Widen your understanding of Tamil culture and architecture at Dakshina Chitra, Muttukadu
32. Go to Sittanavasal in Pudukkottai district to see some of the oldest Jain paintings
33. Visit the iconic Madurai Meenakshi temple
34. Ride into the Mudumalai Tiger Reserve on an elephant
35. Explore corals and other marine life in a glass-bottomed boat in the Gulf of Mannar Marine National Park
36. Visit Karaikudi to experience the vibrant Chettinad culture, architecture and food
37. Watch Theerthavari in Mahamaham Tank, Kumbakonam, held once in 12 years. A dip in the tank is believed to offer the combined benefits of a bath in all the sacred rivers. The next Mahamaham is in 2016.
Dindigul near Madurai has earned the name of Biryani City. Click for moreDindigul near Madurai has earned the name of Biryani City. Click for more
38. Taste some regional speciality dishes and snacks -- Dindigul biryani, Manaparai muruku, Thirunelveli halwa, Madurai jigar thanda and Kumbakonam coffee
39. Visit the Birla Science Planetarium in Chennai
A lake surrounded by tea gardens in Meghamalai. Click for moreA lake surrounded by tea gardens in Meghamalai. Click for more
40. Spot endangered wildlife in Meghamalai in Theni district. Meghamalai is also known for its spice tourism with a variety of plantations including tea, coffee, pepper, cardamom and cinnamon.
41. Throw rice on the bride and groom at a Tamil wedding. Rice signifies prosperity and fertility
42. Buy a pair of Kuthu Vilakku — brass lamps -- from Nachiyar Kovil in Kumbakonam. Every public event and home celebration begins only after these brass lamps are lit.
43. Witness the making of bronze statues using the traditional Lost-Wax process at Swamimalai near Kumbakonam
44. Join the Students' Sea Turtle Conservation Network (SSTCN) volunteers on a night walk along the beaches of Chennai to conserve and create awareness about the endangered Olive Ridley Sea Turtle.
45. Enjoy the panoramic view of Tiruchi and Srirangam from Tiruchi Malai Kotai Rock Fort
46. Get your picture on a street poster or a billboard for some reason (marriage, birthday, welcoming a political leader, coming-of-age ritual, ear-piercing ritual, or just to wish your favourite actor or sports star!)
Flamingos at Pulicat Lake. Photo: Lakshmi Sharath. Click for storyFlamingos at Pulicat Lake. Photo: Lakshmi Sharath. Click for story
47. Go birdwatching in any of the birding hotspots -- Vedanthangal , Pulicat Lake, Kunthakulam or Point Calimere
48. Taste the Mukkani -- three supreme and heavenly fruits -- mango, jackfruit and banana
49. Try to know your future from Nadi Jothidam - these are palm manuscript horoscopes written hundreds of years ago for every individual on earth. Or try parrot astrology or palmistry.
50. Walk amidst lush green paddy fields
Thennarasu is a BPO employee who works in Chennai. Originally from Kumbakonam, his interests include travel, photography, meeting new people, bird-watching and cooking.