ராமசாமி கூற்று முற்றிலும் உண்மை!வாழ்க பல்லாண்டு!
‘‘விவசாயம்தான் சாமி...!’’
100 வயது விவசாயி பெருமை...!
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ளது அரளிக்கோட்டை. இந்த கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி கடந்த 24 ம் தேதி தனது 100 வது வயதை கடந்தார்.
இவருக்கு சோமசுந்தரம், மணிவாசகம் என 2 மகன்களும், மாணிக்கவள்ளி, கல்யாணி, சிவகாமி என 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் வழியாக 11 பேரன்கள், 8 பேத்திகள், 26 கொள்ளுப்பேரன்கள், பேத்திகள் உள்ளனர். ராமசாமியின் 100வது பிறந்தநாளை மிகவும் உற்சாகமாக கொண்டாட குடும்பத்தினர் முடிவு செய்திருந்தனர். இதையொட்டி, நேற்று அரளிக¢கோட்டையில் உள்ள அவரது வீட்டில், பிறந்தநாள் விழா ஊர் மக்கள் மத்தியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவில் முன்னாள் அமைச்சர்கள் பெரியகருப்பன், தென்னவன் மற்றும் அரளிக்கோட்டையை சேர்ந்த சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ராமசாமியை வணங்கி ஆசி பெற்றனர். 100 வயதைக் கடந்த ராமசாமி பேசும் போது, ''இன்றைய இளைய தலைமுறையினர் விவசாயத்தையே மறந்து வாழ்கின்றனர். விவசாயம்தான் நமக்கு சாமி. நம்நாட்டின் முதுகெலும்பு விவசாயம்தான். எனது வாழ்நாளில் 20 வயது முதல் 90 வயது வரை விவசாயப் பணி செய்தேன். நிறைய இளைஞர்கள் விவசாயத்திற்கு வர வேண்டும்.
அன்று அதிகம் பேர் சாப்பிட்டு வந்த கம்பு, கேழ்வரகு, கேப்பை ஆகிய உணவுகளில் உள்ள சத்து இன்றைய உணவில் இல்லை. கடின உழைப்பு மக்களிடம் குறைந்து விட்டது. அதனால்தான் இளம் வயதிலேயே அனைவரும் நோய்வாய்ப்படுகின்றனர். வயது கூடும்போது உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம். தற்போது நாம் சாப்பிட்டு வரும் அரிசியில் உடலை வலுவாக்கும் சத்துகளே இல்லை’’ என்றார் அந்த முன்னாள் விவசாயி.

No comments:
Post a Comment