Monday, December 27, 2010

அஜித்தின் இந்த மனிதநேயம் எனக்கு நெகிழ்ச&

விஜயகாந்திடம் தன் நண்பரின் குழந்தை இதய ஆபரேசனுக்காக உதவி கேட்டு போயுள்ளார் ஒரு உதவி இயக்குனர்.

அவர் விஜகாந்த் நடித்த கண்ணுபடப்போகுதய்யா படத்தில் பணியாற்றியவர்.

உதவி கேட்ட அவரிடம் விஜயகாந்த் இதுவரை இரண்டாயிரம் பேர் வரிசையில் இருக்காங்க நீ வேற போயாஎன்று சொல்லவும்,அந்த உதவி இயக்குனர் மருத்துவ செலவுக்கு தேவையான இரண்டு லட்சத்தில் ஒன்னேகால் லட்சம் இருக்கிறது தேவை எழுபத்தி ஐந்தாயிரம் மட்டுமே.முழுதும் கொடுக்க முடியாவிட்டால் உங்களால் முடிந்ததை கொடுங்கள் என்று சொல்ல கடுப்பான விஜயகாந்த் கோபத்தில் திட்டி விட்டாராம்.

மனம் தளராத அந்த உதவி இயக்குனர்,மருந்து வாங்க 500/ ரூபாய் கேட்டாராம் அதைக்கூட தராமல் துரத்தி விட்டாராம் விஜயகாந்த்.


நொந்து போன அந்த உதவி இயக்குனர் தன் நண்பர் உதவி கேமராமேனிடம் விஷயத்தை சொல்ல அவர் அஜித்திடம் அழைத்து போனாராம்.

படப்பிடிப்பில் இருந்த அஜித் இவர்கள் மூவருக்கும் உணவு வழங்கி விட்டு நடிக்க போய் விட்டாராம்.பேசாமல் அவர் போனதும் மனம் வெந்து போய்விட்டார்களாம்.

ஒரு மணிநேரம் கழித்து வந்த அஜித் சரி ஆரம்பிங்க என்றவுடன் இருவருக்கும் புரியவில்லை .

அஜித் இவர்கள் கதை சொல்ல வந்திருக்கிறார்கள் என்று நினைத்து இவர்களுக்கு நேரம் ஒதுக்குவதற்காக வேக,வேகமாக நடித்து கொடுத்து விட்டு வந்தாராம்..

மணவாளன் குழந்தையின் ஆபரேசனுக்கு பணம் கேட்டு வந்தோம் என்று சொல்ல கோபத்தில் துடித்த அஜித் இதை முதலிலேயே சொல்ல கூடாதா நான் கதை சொல்ல வந்தீர்கள் என்றல்லவா நினைத்தேன் எனறு கடிந்து எவ்வளவுதேவை என்று கேட்டாராம்.

விஜயகாந்திடம் திட்டு வாங்கிய பயத்தில் உதவி இயக்குனர் ஒரு ஐயாயிரம் கொடுத்து உதவுங்கள் என்றாராம்.


கோபமான அஜித் மொத்தம் தேவை எவ்வளவு என்று சொல்லுங்கள் என்று அதட்டவும்,எழுபத்து ஐந்து ஆயிரம் தேவை என்று சொல்லவும் ,மொத்தமாக நானே தருகிறேன் ஆனால் இதை பத்திரிக்கைக்கு சொல்லக்கூடாது என்ற கண்டிப்புடன் உடனே செக் போட்டு கொடுத்து விட்டாராம்.


அஜித்தின் இந்த மனிதநேயம் எனக்கு நெகிழ்ச்சியில் கண்ணீர் வரவைத்து விட்டது.நாட்டை ஆள்வதற்கு துடிக்கும் விஜயகாந்தின் மனதிற்கும் ,செய்வதை பிறர்க்கு தெரியாமல் செய்ய நினைக்கும் அஜித்தின் மனதிற்கும் உள்ள வித்தியாசத்தை நினைத்து.

Sunday, December 26, 2010

Wonderful Indian Temples Abroad

Sri Srinivasa Perumal Temple or Sri Perumal Temple , Little India , Serangoon Road , Singapore
Sri Venkateswara Swami Temple , Helensburgh , Sydney , Australia
Lord Vishnu Temple , Angkor , Cambodia
The largest temple of the world , raised during the reign of Suryavarman- II in 12th century , is , in fact , located in Angkor , a major archaeological site of Cambodia . It is dedicated to Lord Vishnu. It is also one of the two temples intact in Angkor , Cambodia . The other is a Buddhist Temple . The largest temple of Lord Vishnu in Angkor is built according to Khmer architecture , original to Cambodia ..
Sri Venkateswara Temple , Bridgewater , NJ , US
Venkateswara Swami temple , Riverdale near Atlanta , Georgia , US
Shiva-Vishnu Temple , Livermore , California , US
Sri Murugan Temple Batu Caves , Penang , Malaysia

Lord Vishnu Temple , Angkor , Cambodia
The largest temple of the world , raised during the reign of Suryavarman- II in 12th century , is , in fact , located in Angkor , a major archaeological site of Cambodia . It is dedicated to Lord Vishnu. It is also one of the two temples intact in Angkor , Cambodia . The other is a Buddhist Temple . The largest temple of Lord Vishnu in Angkor is built according to Khmer architecture , original to Cambodia ..

BAPS Shri Swaminarayan Mandir , London ( Neasden Temple ) , United States
Mother Temple of Besakih , Bali , Indonesia
Sri Venkateswara Swami Temple of Greater Chicago - Aurora , Illinois , United States
Shiva-Vishnu Temple , Livermore , California , US
Murugan Temple , Sydney , Australia
BAPS Shri Swaminarayan Mandir - Toronto , Canada
Velmurugan Gnana Muneeswarar Temple , Rivervale Crescent Sengkang , Singapore

Tuesday, December 21, 2010

God of Cricket Sachin Tendulkar 50 Ton Listed

God of Cricket Sachin Tendulkar made history by becoming the first player in the Test cricket to hit 50 centuries during todays Test match against South Africa at SuperSport Park in Centurion.



No. 1: Sachin Tendulkar scored unbeaten 119 in Manchester against England in 09 Aug 90.
No. 2: Tendulkar scored unbeaten 148 at the SCG against Australia in 1992.
No. 3: Tendulkar made 114 in Perth WACA against Australia 1992.
No. 4: Tendulkar scored 111 at the Wanderers Johannesburg against South Africa in 1992,
No. 5: Tendulkar scored 165 in India against England in 1993 in Madras.
No. 6: Tendulkar's second-innings 104 at the SSC in 1993 was his first century in Sri Lanka.
No. 7: Tendulkar scored 142 in Lucknow against Sri Lanka in 1994.
No. 8: Tendulkar's 179 in Nagpur in 1994 against the West Indians.
No. 9: Tendulkar made 122 out of 219 in the second innings at Edgbaston in 1996.
No. 10: Tendulkar scored 177 at Trent Bridge in 1996.
No. 11: Tendulkar's 169 at Newlands in 1997
No. 12: Tendulkar's 143 allowed India to declare on 537 for 8 at the Premadasa Stadium in 1997.
No. 13: Tendulkar scored 139 at the SSC in Colombo in 1997.
No. 14: Tendulkar scored 148 against Sri Lanka, in Mumbai in 1997.
No. 15: Tendulkar made 155 against Australia, in Chennai, 1998.
No. 16: Tendulkar scored 177 out of the 281 runs India against Australia in Bangalore in 1998.
No. 17: Temdi;lar scpred 100 out off 123 balls at Wellington, 1998.
No 18: Tendulkar's 136, against Pakistan in Chennai in 1999,
No. 19: Tendulkar made an unbeaten 124 at the SSC in 1999,
No. 20: Tendulkar scored 126 not out against New Zealand at Mohali in 1999.
No. 21: Tendulkar scored his first double-century - 217 against New Zealand at Motera in 1999.
No. 22: Tendulkar made 116 at the MCG in 1999,
No 23: Tendulkar made 122 against Zimbabwe at the Kotla in 2000,
No. 24: Tendulkar made 201 against Zimbabwe in Nagpur in 2000
No. 25: Tendulkar made 126 in Chennai against Australia in 2001
No. 26: Tendulkar made155 in Bloemfontein in 2001
No. 27: Tendulkar made103 at Motera in 2001 against England.
No. 28: Tendulkar's 176 against Zimbabwe in Nagpur 2001
No. 29: Tendulkar's 117 in the West Indies at Trinidad in 2001
No. 30: Tendulkar scored 193 at Headlingley in 2002
No. 31: Tendulkar scored 176 in Kolkata, 2002 against West Indies
No. 32: Tendulkar scored 241 at the SCG in 2004
No. 33: Tendulkar scored194 in Multan in 2004
No. 34: Tendulkar scored 248 in Dhaka in 2004
No. 35: Tendulkar scored 109 against Sri Lanka at the Kotla in 2005
No. 36: Tendulkar scored101 in Chittagong in 2007
No. 37: Tendulkar scored 122 in Dhaka in 2007
No. 38: Tendulkar scored154 at the SCG in 2008
No. 39: Tendulkar scored153 at the Adelaide Oval, in 2008.
No. 40: Tendulkar scored 109 against Australia in Nagpur in 2008.
No. 41: Tendulkar's match-winning 103 against England in Chennai,
No. 42: Tendulkar scored 160 in Hamilton in 2009 in the New Zealand
No. 43: Tendulkar scored unbeaten 100 at Motera in 2009 against Sri Lanka,
No. 44: Tendulkar scored 105 against Bangladesh in 2009
No. 45: Tendulkar scored 143 against Bangladesh in Mirpur in 2009
No. 46: Tendulkar scored 100 against South Africa in Nagpur in February 2010.
No. 47: Tendulkar scored 106 in Kolkata against South Africa in 2010
No. 48: Tendulkar scored 203 against Sri Lanka at the SSC in 2010
No. 49: Tendulkar scored 214 in Bangalore against Australia in 2010.
No. 50: Tendulkar playing at 107 in Centurion ............

Friday, December 17, 2010

The problems with GIRLS

If u TREAT her nicely, she says u are IN LOVE with her;
if u Don't, she says u are PROUD.



If u DRESS Nicely,she says u are trying to LURE her;
if u Don't, she says u are from KAMPUNG.



If u ARGUE with her, she says u are STUBBORN;
If u keep QUIET, she says u have no BRAINS.



If u are SMARTER than her, she'll lose FACE;
If she's Smarter than u, she is GREAT.



If u don't Love her, she tries to POSSESS u;
If u Love her,she will try to LEAVE u.(very true huh?)



If u tell her your PROBLEM, she says u are TROUBLESOME;
If u don't, she says that u don't TRUST her.



If u SCOLD her, u are like a SAAS to her.
If she SCOLDS u, it is because she CARES for u.



If u BREAK your PROMISE, u Cannot be TRUSTED;
If she BREAKS hers, she is FORCED to do so.


If u SMOKE, u are BAD BOY.
If she SMOKES, she is GENIOUS


If u do WELL in your exams, she says it's LUCK;
If she does WELL, it's BRAINS.

If u HURT her, u are CRUEL;
If she HURTS u, u are too SENSITIVE!!

& sooo hard to please!!!!!


if u tell this to girls,they will swear that it's not true.......
but if u don't, they say u are selfish.....
__________________

பெண்களிடம் தப்பித் தவறி கூட கேட்கக் கூடாத சில கேள்விகள்!

1. நாங்கதான் உங்களுக்கு ரீ-சார்ஜ் பண்ணி அனுப்புறோம். ஆனாலும் நீங்க எதுக்கு மிஸ்டு கால் கொடுத்தே எங்க உயிரை வாங்குறீங்க? உங்ககிட்ட ஃபோன்ல பேசின காசையெல்லாம் சேர்த்து வெச்சிருந்தா, நான் லோன் போட்டு பைக் வாங்கி இருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது!

2. ஒரு பொண்ணு கொடுக்குற மிஸ்டு காலை மட்டும் யாராலும் அட்டெண்ட் பண்ணவே முடியாது. அவ்ளோ ஷார்ப்பா கட் பண்ணுவாங்க. இப்படி மிஸ்டுகால் கொடுக்க நீங்க எந்த யுனிவர்சிட்டியில ட்ரெயினிங் எடுத்துகிட்டிங்க?

3. அது ஏன் எப்போ பார்த்தாலும், எது கேட்டாலும் ‘ஹி.. ஹி’ன்னு சிரிச்சுகிட்டே இருக்கீங்க? ஒரு மணி நேரம் உங்ககிட்ட ஃபோன்ல பேசினா அதுல நாற்பது நிமிஷம் சிரிச்சுகிட்டேதான் இருக்கீங்க. ஏன் நீங்க ஏதாவது பேஸ்ட் விளம்பரத்துல நடிக்கிறதுக்கு எங்ககிட்ட ட்ரெயினிங் எடுக்கிறீங்களா?

4. ஃபோன்ல நாங்களேதான் பேசிகிட்டு இருக்கோம். எதைக் கேட்டாலும் “நீங்க சொல்லுங்க, நீங்க சொல்லுங்க’ன்னா” நாங்க என்னத்தை சொல்லி தொலைக்குறது? உங்களுக்கு எதையுமே பேசத் தெரியாது போலன்னு நினைச்சு நாங்க பாட்டுக்கு எதையாவது சொல்லி தொலைச்சுடுவோம்.

அதையே மனசுல வெச்சுகிட்டு, கல்யாணத்துக்கு அப்புறம் வாங்கி கட்டிக்கிறது எங்களுக்கு மட்டும்தான் தெரியும். அது எப்படி பேசவே தெரியாத மாதிரி சீன் போடுறீங்க?

5. மெசேஜ்’ல மட்டும் ரொம்ப ரொமாண்டிக்கா SMS அனுப்பி எங்க தூக்கத்தை கெடுக்குறீங்க. ஆனா அதையே நேர்ல சொல்ல சொன்னா மட்டும் வெட்கத்தையே என்னமோ நீங்கதான் குத்தகைக்கு எடுத்த மாதிரி வெட்கப்படுறீங்க?

இது எப்படி உங்களால மட்டும் முடியுது? மெசேஜ் அனுப்பும் போதெல்லாம் உங்க வெட்கத்தை என்ன ஃப்ரிட்ஜ்’க்கு உள்ளே ஒளிச்சி வெச்சிடுவீங்களா?

6. ‘ஹேய்… உனக்கு எப்படி அது தெரியும்?’ அப்படிங்கிற கேள்வியை மட்டும் கேட்டுட்டா போதும். உடனே “நான் உங்க இதயத்துல தானே இருக்கேன்… இது கூட எனக்கு தெரியாதான்னு” உடனே ஒரு டயலாக் விடுவீங்க.

இந்த மாதிரி எல்லாம் டயலாக் விட டைரக்டர் கதிர்கிட்ட கத்துகிட்டீங்களா என்ன?



7. அப்புறம் அப்புறம்’ங்கிற மொக்கையவே அரை மணி நேரமா போடுறீங்க. சரி வெச்சுடுறேன்னு நாங்க ஃபோனை கட் பண்ண போகும்போதுதான் “என் கூட பேசறது உங்களுக்கு போரடிக்குதா”ன்னு ஒரு சென்டிமென்ட் சீன் ஓபன் பண்ண வேண்டியது. உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி?

8. நீங்க கிஃப்ட் கொடுத்தா மட்டும் விலையைப் பார்க்க கூடாது. அதுல உங்க அன்பைத்தான் பார்க்கணும். ஏன்னா நிச்சயமா அந்த கிஃப்ட் கீ-செயினாவோ, கர்ச்சீஃபாவோ, இல்லை அதிகபட்சமா மணிபர்ஸாவோதான் இருக்கும். ஏன்னா அதுங்கதான் ஐம்பது ரூபாய்க்கு கிடைக்கும்.

ஆனா இதே நாங்க கிஃப்ட் கொடுக்கும் போது மட்டும் சுடிதாரோ, செல்ஃபோனோ, தங்க செயினோ, வெள்ளி கொலுசோ, குறைஞ்சது 3,000/- ரூபாய்க்கு செலவு பண்ணாதான் நாங்க உங்க மேல உண்மையான அன்பு வெச்சிருக்கிறதா அர்த்தம். என்ன கரெக்ட்டா? உங்க அன்போட அளவுகோலுக்கு எல்லையே கிடையாதா?

09. “உன் நியாபகமாவே இருந்துச்சு. ராத்திரி எல்லாம் தூக்கமே வரலை”ன்னு மனசாட்சி இல்லாம பொய் சொல்றீங்களே.. என் நியாபகமாவே இருந்துச்சினா என் கூட பேச வேண்டியது தானே.

இந்தக் கேள்வியை நாங்க கேட்டுடக் கூடாதுனு அர்த்த ராத்திரியில பேய் முழிச்சுகிட்டு இருக்கிற நேரத்துல, ஒரு மிஸ்டுகால் கொடுத்துட்டு, மறுநாள் காலையில உனக்கு என் நியாபகமே இல்லைன்னே சண்டை போட வேண்டியது. இந்த விஷயத்துல சத்தியமா உங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது.

10. நீங்க யூஸ் பண்ணி தூக்கி போட்ட பொருளை எல்லாம் நாங்க சேர்த்து வெச்சிருக்கணும்னு எதிர்பார்க்குறீங்களே, நாங்க என்ன நீங்க தூக்கி போடுறதை எல்லாம் சேர்த்து வெக்கிற குப்பை தொட்டியா?


இந்த கேள்வியெல்லாம் தப்பி தவறி கேட்டுட்டு, நீங்கள் அடிவாங்கினால் நான் பொறுப்பல்ல..............
__________________

Friday, December 10, 2010

: தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கருணாநிதி...

தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கருணாநிதி:

கருணாநிதியின் தனக்கு தானே எழுதிக் கொண்ட நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் பக்கம் 80 ல் கூறியிருப்பதை பார்க்கலாம்.

*1944 ம் ஆண்டு எனக்கும், பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற்றது. ஓராண்டு காலம் வரையில் வாழ்க்கையின் சுவைபடலம் பேரானந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை.

இதனால், மனஅமைதி குறைய தலைப்பட்டது. இப்படியே வேலை இல்லாமல் திரிந்து கொண்டிருந்தால், வாழும் காலம் எப்படி போய் முடிவது? என்ற கேள்விகள் எல்லா பக்கங்களிலிருந்தும் கிளம்பின. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வேலை தேடி அலைந்தேன். வாழ்வதற்கு என்ன வழி என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினேன். அதன் விளைவு நாடக நடிகனாக ஆனேன்.
இவ்வாறு தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார் கருணாநிதி.

பக்கம் 81,82 ல்..............
*விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். அங்கு அறைகுறையாக உணவு கிடைக்கும். குளிப்பது என்பது அங்கு மிகவும் பெரிய பிரச்சனை. நாங்கள் குடியிருந்த இடத்திலிருந்து குளிக்க வேண்டுமென்றால், 1 கிமீட்டர் தூரமாவது செல்ல வேண்டும். வயலுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் இடங்களில் தான் எங்களது குளியல். அந்த குழாய் தான் எங்களுக்கு குற்றால அருவி. குடிநீர் எல்லாம். குளித்து விட்டு வீட்டுக்கு கிளம்புவோம். கடுமையான வெயில் கொளுத்தும். சிறிய துண்டை இடையில் கட்டிக் கொண்டு, துவைத்த சட்டையை தோளில் உலரப் போட்டுக் கொண்டு சவுக்கார சோப்பினால் வெண்மையாக மாற்றப்பட்ட வேட்டியை, இரு கைகளாலும் தலைக்கு மேலே குடை போல பிடித்துக் கொண்டு அதனை உலர வைத்தவாறு வீட்டிற்கு வந்து உலர்ந்த பின் அவற்றை அணிந்து கொண்டு பிற்பகல் உணவிற்கு தவமிருப்போம்.

இதற்கடுத்து, 92,93 ம் பக்கங்களில்................
* பெரியாரின் ஈரோட்டு குடியரசு பத்திரிகை அலுவலகத்தில் துணை ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாதம் சம்பளம் 40 ரூபாய். அதிலும் பிற்பகலும், இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய் பிடித்துக் கொள்வார்கள். காலை, மாலை சிற்றுண்டிக்காக மாதம் 10 ரூபாய் போய் விடும். எனது இதர செலவுகள் ஐந்து ரூபாய். மீதம் 5 ரூபாயை தான் என்னை நம்பி அண்டி வந்த அருமை மனைவி பதமாவதிக்கு மாதந்தோறும் திருவாரூக்கு மணியார்டர் செய்வேன்.

பக்கம் 92,93 ல்..............................
* பெரிய அளவில் வைத்திய உதவிகளை எனது தந்தையாருக்கு செய்ய வசதியான நிலையில் குடும்பம் இல்லை. என் தந்தை இறந்து விட்டார்.

இப்படி கருணாநிதி எழுதிவைத்துள்ளார்.
இன்றைக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

1.கருணாநிதியின் கோபாலபுரம் வீடு
2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்
3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு
4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்கப்பட்டது)
5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம்
6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்
7. அமிர்தம் வீடு- கோபாலபுரம்
8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்
9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு
10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி
11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்
12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)
13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)
14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)
15. தயாநிதி மாறன் வீடு
16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை
17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு
18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்
19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை
20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில்
21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை
22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்
23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32 கிரவுண்ட் நிலம்
25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி
26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக
27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது
28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை
29. அந்தமான் தீவின் நிலங்கள்
30.அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள்
31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு
32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை
33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்
34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது
35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு
36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர் தோட்டங்கள்
37. செல்வம் வீடு
38. முக.ஸ்டாலின் சொத்துக்கள்
39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை.
40.முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள், மதுரை நகரின் வீடியே பார்லர்கள், கடைகள், ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள்
41. செல்வம் வீடு-பெங்களுர்
42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர்
43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை
44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ் சாலை.
45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள்
46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, சென்னை.
47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள்.
49 .additional properties after semmuzi coimbatore farm house
50. broke bond land in coimbatore (given to rental for RMKV silks)
extra extra extra extra

இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.
திருவாரூரில் இருந்து கட்டிய வேட்டியும், தோளில் போட்ட துண்டுடன் , சென்னை நகருக்கு கள்ள ரயில் ஏறிவந்த கருணாநிதி குடும்பம் இன்று இந்திய பணக்காரர்கள் பட்டியலில்.

வாழ்க தமிழ்நாடு. வாழ்க வந்தாரை வாழழழழழழ வைக்கும் தமிழ்மக்கள்

Please think well before you decide...

Save the Tamilnadu...

Friday, December 3, 2010

1,76,0000 + 70,000 + 42,000 = 2,88,000!! – கோயிந்தா கோயிந்தா!!

வாஜ்பாய் பிரதமராக இருந்த நேரம். நதிகள் இணைப்பு குறித்த பேச்சுகள் அதன் உச்ச கட்டத்தை எட்டியிருந்தன.

நிபுணர் குழுவொன்றை வைத்து நதிகளை இணைக்கும் திட்டத்துக்கு ஆகும் செலவு குறித்த மதிப்பீட்டைத் தரச் சொன்னது மத்திய அரசு.

வட இந்திய மற்றும் தென்னக நதிகளை இணைக்கும் இந்தத் திட்டத்துக்கு ரூ 500000 லட்சம் கோடி தேவைப்படும் என அறிவித்தது அந்தக் குழு!

வாஜ்பாய் அரசு போன பிறகு, காங்கிரஸ் கட்சியின் மன்மோகன் சிங் பிரதமரானார். இந்த நதிநீர் இணைப்புப் பிரச்சினை மீண்டும் எழுந்தது. இமயமலையில் உற்பத்தியாகும் 14 முக்கிய ஆறுகளையும் தென்னக நதிகளுடன் இணைக்கும் திட்டம் குறித்து விரைந்து முடிவை அறிவிக்குமாறு, ஒரு பொது நல வழக்கில் உச்சநீதிமன்றம் சொன்னது.

சில மாதங்கள் கழித்து மன்மோகன் சிங் அரசு உச்சநீதிமன்றத்தில் இப்படி பதில் கொடுத்தது:

இந்தத் திட்டம் மிகப் பெரிய செலவு பிடிக்கும் ஒன்றாக உள்ளது. திட்டச் செலவு ரூ 5 லட்சம் கோடிகளுக்கும் மேல் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. நாடு இப்போதிருக்கும் நிலையில், நதி நீர் இணைப்புத் திட்டம் சாத்தியமல்ல…” என்று ஒரேயடியாக நதிநீர் இணைப்புக் கனவில் மண்ணள்ளிப் போட்டது!

ரூ 5 லட்சம் கோடி தொகையை, நாட்டின் ஜீவாதாரப் பிரச்சினையைத் தீர்க்க செலவழிக்க முடியாது என்று சொன்ன மன்மோகன் சிங் அரசில், சமீப காலத்தில் நடந்துள்ள முறைகேடுகள் மற்றும் ஊழலின் மதிப்பு எவ்வளவு தெரியுமா… ரூ 2.88 லட்சம் கோடி!!

1,76,0000….

2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மட்டும் மன்மோகன் சிங் ஆசியுடன் அன்றைய தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ ராசாவால் ஏற்பட்ட இழப்பு ரூ 1.76 லட்சம் கோடி. இதனை யாரோ ஒரு எதிர்க்கட்சித் தலைவர் சொல்லவில்லை… இந்திய நாட்டின் அரசியல் சாசன சட்டப்படி உருவாக்கப்பட்ட மத்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலர் அதிகாரப்பூர்வமாக, ஒரு அறிக்கையாகவே தாக்கல் செய்திருக்கிறார்.

இந்தத் தொகையை ராசாவா வாங்கினார் என்ற கேள்வி எழலாம். லஞ்சத்தை நேரடியாகத்தான் பெற வேண்டும் என்றில்லையே!

இந்த 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேட்டில் ராசா தவிர்த்து யாரெல்லாம் பலனடைந்திருக்கிறார்கள் என்று பார்த்தால், அது தலை சுற்ற வைத்துவிடும். திமுக, காங்கிரஸ் கட்சிகளின் தலைமை, அந்த தலைமையின் குடும்பங்கள், அந்த குடும்பங்களுக்கு கப்பம் கட்டிய கார்ப்பரேட்டுகள் என பலரும் இந்த விவகாரத்தில் தொடர்புள்ளவர்களாக உள்ளனர்.

அரசியல் புரோக்கரான நீரா ராடியாவுக்கே ஒரு 2 ஜி டீலை முடித்துக் கொடுக்க ரூ 60 கோடி கமிஷனாகக் கிடைத்திருக்கிறதென்றால், இந்த ஊழலின் கதாநாயகன்கள் பெற்றுள்ள ஆதாயத்தின் அளவை யூகிக்க முடிகிறதா…

70,000…

2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டோடு ஒப்பிடுகையில் இந்த ரூ 71000 கோடி சின்ன தொகைதான்!! காமன்வெல்த் போட்டிகளுக்காக ஒதுக்கப்பட்ட இந்தத் தொகையில் எத்தனை சதவீதம் செலவிடப்பட்டது என்ற கணக்கே இன்னும் வந்தபாடில்லை. பெயருக்கு சில கோடிகளை செலவழித்துவிட்டு, மீதியை கூட்டாக பங்குபோட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த கொள்ளையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமே இல்லை. புகுந்து விளையாடியிருக்கிறார்கள்.

42000…

அரசியல்வாதிகளுக்கு நாங்கள் மட்டும் சளைத்தவர்களா… என்ற வேகத்தில் அதிகாரிகள் அடித்த கொள்ளையின் ஒரு பகுதிதான் இந்த ரூ 42000 கோடி.

வீட்டுக் கடன்கள் வழங்குதல் என்ற பெயரில் 12 தேசிய வங்கிகள் மற்றும் எல்ஐசியின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் அதிகாரிகளே அடித்த கொள்ளை இது. இந்தத் தொகை ஆரம்பகட்ட விசாரணையில் வெளிவந்திருப்பது மட்டுமே. அடுத்த கட்ட விசாரணைக்குப் போகும்போது, 2 ஜி ஸ்பெக்ட்ரம் அளவுக்கு வளர்ந்து நிற்கலாம்… சொல்ல முடியாது!

இவற்றைத் தவிர, ‘சில்லறை ஊழலாக’ ஆதர்ஷ் வீட்டு வசதி முறைகேடு, எடியூரப்பாவின் நில ஒதுக்கீட்டு முறைகேடு (இது கர்நாடகத்தில் பாஜகவின் திருவிளையாடல்) என பட்டியல் தொடர்கிறது.

ஆனால் மக்களுக்கு இதில் பெரிதாக ஆர்வம் இல்லை. ‘அடித்தால் லட்சக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான கோடிகளில்தான் இனி அடிக்க வேண்டும்… அதில்தான்

கொஞ்சம் சுமாரான த்ரில் இருக்கிறது. சும்மா சில்லறைத்தனமா பத்து கோடி, நூறு கோடின்னு அடிக்கறதெல்லாம் ஒரு ஊழலா..?’ என்ற நினைப்பு வந்துவிட்டது அவர்களுக்கு.

எப்படியும் எந்த ஊழலிலும், கொள்ளையடிக்கப்பட்ட தொகை அரசு கஜானாவுக்கு திரும்பியதாக சரித்திரம் இல்லையென்பதால், கொஞ்ச நாள் பரபரப்பாகப் பேசி பொழுது போக்கிவிட்டு மறந்துபோவது ஒன்றுதான் இந்த ஊழல் கதைகளின் க்ளைமாக்ஸ்!

இப்போது அந்தக் க்ளைமாக்ஸை நோக்கித்தான் வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறது நிலைமை. புதிய தேர்தல், கூட்டணிக் கதைகளுக்கு கருணாநிதி, சோனியா உள்ளிட்டோர் பரபரப்பாக திரைக்கதை தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். குடும்பத்துக்கு எத்தனை ஆயிரம் ரூபாய் கவர் கிடைக்கும் என்ற பிரச்சினை மக்களுக்கு…

தலைவர்கள் – அதிகாரிகள் தைரியமாக ஊழல் செய்யலாம்!
__________________