Tuesday, August 27, 2013

சின்ன வயசுல நாம எப்படியெல்லாம் இருந்தோம். இப்ப எப்படியெல்லாம் இருக்கோம்!!


1.நமக்கு சாப்புட கைல ஒரு பாக்கெட் மிட்டாய் கிடைச்சாலும் அதை ஒரு நொடில தின்னு காலி பண்ணிருவோம்.இல்லாட்டி நம்ம மண்டை வெடிச்சுரும்.இப்ப அதை கொடுத்தா ஒன்னு மட்டும் எடுத்து வாய்ல போட்டு பாக்கெட்ட ஓரமா வச்சுருவோம்.

2.திருவிழா கடைக்கு போனா நம்ம கண்ல பட்டதெல்லாம் கைய நீட்டிக் கேட்டிருப்போம். இல்லை என்ற பதில் தான் அதிகம் கிடைச்சுருக்கும். அதையும் காசு இல்லைன்னு உண்மைய சொல்லாம அந்த பொருள் நல்லா இல்லைன்னு பொய் சொல்லிருப்பாங்க. இப்ப அது எல்லாத்தையும் வாங்க நம்மகிட்ட காசு இருக்கும், ஆனா விளையாட வயசு தான் இருக்காது.

3.அம்மாக்கிட்ட நொய் நொய்ன்னு எதையாவது பேசிக்கிட்டே இருப்போம்.அவங்களும் புரிஞ்சாலும் புரியாட்டியும் மண்டைய ஆட்டி ரசிச்சுருப்பாங்க. இன்னைக்கு அம்மா நம்ம கிட்ட பேசறப்ப, நாம என்னவோ கலெக்டர் வேலைக்கு போற மாறி "சீக்கிரம் சொல்லுமா " ன்னு அலுத்துகுவோம்.

4.அப்பா நேரத்தோட வீட்டுக்கு வரலைன்னா மூஞ்ச தூக்கிட்டு மூலைல உட்காந்திருப்போம்.இன்னைக்கு நாம நேரம் கழிச்சு வீட்டுக்குப் போறப்ப அப்பா வீட்டுல இல்லைன்னா "அப்பாடா தப்பிச்சோம்" ன்னு பெருமூச்சு விடுவோம்.

5. சிபிஐ மாறி நம்ம அக்கா, அண்ணா லாம் என்ன பண்றாங்கன்னு கவனிக்கரதையே வேலையா வச்சுருப்போம். " இரு இரு உன்னைய அப்பாக்கிட்ட சொல்றேன்னு " மிரட்டி வேற பாப்போம்.இன்னைக்கு நாம பண்ற வேலையெல்லாம் அவங்களுக்கு தெரியாம பாத்துகறதே நமக்கு பெரிய வேலையா இருக்கும்.

6.ஏலேய்....ன்னு ஒரு சத்தம் கேட்டாலே ஓடிபோய் அம்மா முன்னாடி நிப்போம்.இப்ப கோர்ட்ல கூப்புடற மாறி 3 தரம் பேரச் சொல்லிக் கூப்டா கூட நம்ம காதுல விழாத அளவுக்கு இணையத்தில் மூழ்கி இருப்போம்.

7.அப்பாவோ அம்மா வோ வெளிய போனா, என்னைக் கூப்டு போயே ஆகனும்ன்னு தரயில படுத்துட்டு உருண்டு புரண்டு அழுவோம். இப்ப அவங்கள வெளிய கூப்டு போய் அவங்ககூட நேரம் செலவழிக்கரத விட பெரிய வேலைகளெல்லாம் நமக்கு இருக்கும்.

8.பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்குப் போறப்ப, நேரா நடக்க மாட்டோம்.மரக்கிளைய புடிச்சு தொங்கறது, ரோட்ல கிடக்கற கல்ல கலால தள்ளி தள்ளிட்டே போறது. நின்ன இடத்துல சச்சின் போஸ் கொடுக்கறதுன்னு இல்லாத சேட்டைலாம் செஞ்சுக்கிட்டே தான் போவோம். இப்பலாம் ரோட்ல நடக்கறப்ப கைல மொபைல் வச்சுட்டு குனிஞ்ச தலை நிமிராம நேரா போய் செவுத்துல முட்டிப்போம்.

Friday, August 23, 2013

ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...!!

ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும் ஈ.சி எனப்படும் வில்லங்கச் சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறை அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. பொதுவாகவே ஈ சி (EC - Encumbrance Certificate) எனப்படும் (வில்லங்க சான்றிதழ்) கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாட வேண்டும் அல்லது ரிஜஸ்டர் ஆபிசுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடக்க வேண்டிய கட்டாயம்.

இனிமேல் 1 ரூபாயில் ஆன்லைனில் எடுத்துவிடலாம். அது போக இதை வீட்டுக்கு கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் கூட அனுப்பி வைக்க இந்த அரசாங்கம் ரெடி நீங்க ரெடியா?

ஈஸி எடுக்க 1 ரூபாய். முதல் வருடத்திற்க்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷம் கூடுதல் ரெக்கார்ட் பெற 5 ரூபாய், பத்து வருடத்திற்க்கு தோராயமாக 1+15+9 = 61 ரூபாய் தான் செலவு. இதை உங்கள் வீட்டுக்கே கொரியர் செய்ய ரூபாய் 25 தான் செலவு. ஆன்லைனில் நேரடியாக தேடி பிரின்ட் அவுட் செய்து கொள்ள வெறும் 100 ரூபாய் தான் மொத்த செலவு.

இது போக ரெஜிஸ்டர் டாக்குமன்ட் காப்பி, சிட்டா அடங்கல் கூட இங்கு காப்பி கிடைக்கும். சென்னை, கடலூர், கோயம்புத்தூர்,திருச்சி, சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர் நம்ம திருநெல்வேலி அலுவலகங்களுக்கும் இது பொருந்தும். அது போக ஆங்கிலத்திலும், தமிழிலும் ஃபார்ம் ஃபில் செய்யலாம்.

அது போக பதிவு திருமண சான்றிதழ் கூட உங்களுக்கு இங்கே ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்யலாம். அதற்கு சார்ஜ் 1ருபாய். கொரியரில் அனுப்ப ஒரு காப்பிக்கு 2 ரூபாய் மற்றூம் கொரியர் சார்ஜ் 25 ரூபாய் மட்டுமே.

அது போக சிட் கம்பெனிகள், சொசைட்டிகளின் டாக்குமென்ட்களை பற்றி தெரிந்து இன்வெஸ்ட் செய்யுங்கள் அது கிடைக்க கூட ஆன்லைன் லின்க் உள்ளது

உங்களின் அரசாங்க லேன்ட் வேல்யு கைட்லைன்ஸ் பெறவும் முடியும். இதனால் நீங்கள் வாங்கும் சொத்துக்கு எவ்வளவு ஸ்டாம்ப் பேப்பர் என முன்னமே திட்டமிட முடியும்.

அதற்கான இணைய தள முகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஈ.சி சர்டிபிகேட் ஆங்கிலத்தில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=0

ஈ.சி சர்டிபிகேட் தமிழில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=1

டாக்குமெண்ட் ரிஜிஸ்ட்ரேசன்
http://www.tnreginet.net/igregn/webAppln/cert_document.asp

திருமணத்தை பதிவு செய்ய
http://www.tnreginet.net/english/smar.asp

சீட்டு கம்பெனி ரிஜிஸ்டர்
http://www.tnreginet.net/english/schit.asp

சொசைட்டி ரிஜிஸ்டர்
http://www.tnreginet.net/english/society.asp

Monday, August 12, 2013

அறியாதவற்றை அறிந்துகொள்ளுங்கள்…!

 கணடங்களில் பெரியது ஆசியா கண்டம்.
* கடல்களில் பெரியது பசுபிக் பெருங்கடல்.
* தீவுகளில் பெரியது ஆஸ்திரேலியா தீவு.
* சிகரங்களில் பெரியது எவரெஸ்ட் சிகரம்.
* மலைகளில் பெரியது இமயமலை.
* ஆறுகளில் பெரியது அமேசான் ஆறு.
* ஏரிகளில் பெரியது காஸ்பியன் ஏரி.
* பாலைவனங்களில் பெரியது சஹாரா பாலைவனம்.
* பாறைகளைப் பற்றிய படிப்புக்கு பெட்ராலஜி என்று பெயர்.
* வெள்ளை யானைகளின் நிலம் என்றழைக்கப்படுவது தாய்லாந்து.
* மலைகளின் நிலம் என்றழைக்கப்படுவது மியான்மர்.
* மணலின் வேதியியல் பெயர் சிலிகான் – டை – ஆக்ஸைடு.
* மண்புழுவுக்கு ஐந்து இதயங்கள் உள்ளன.
* மிக வெப்பமான கோள் வெள்ளி.
* உலகில் 2000 வகையான பாம்புகள் உள்ளன.
* சூரிய ஒளி பூமியை வந்தடைய 8.3 நிமிடங்கள் ஆகின்றன.
*அரபிக் கடலின் ராணி எனப்படுவது கொச்சின்.
* இந்தியாவின் மிகப் பெரிய நூலகம் உள்ள இடம் கொல்கத்தா.
* ஓர் அணிலின் சராசரி ஆயுட்காலம் ஒன்பது ஆண்டுகள்.
* ஃபிலிப்பைன்ஸ் தீவுகளைக் கண்டுபிடித்தவர் மெகல்லன்.
* இரண்டாம் அசோகர் என்றழைக்கப்பட்டவர் கனிஷ்கர்.
* பாண்டிச்சேரியின் பழைய பெயர் வேதபுரி.
* செப்பு நாணயங்களை வெளியிட்டவர் முகமது பின் துக்ளக்.
* எரிமலை இல்லாத கண்டம் ஆஸ்திரேலியா.
தமிழ்நாட்டில் பண்டைய தமிழர்களின் வரலாற்றுச் சான்றாக பத்து அரண்மனைகள் உள்ளன.
அவை,
1. மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை
2. திருச்சி மங்கம்மாள் அரண்மனை
3. தஞ்சாவூர் சரபோஜி அரண்மனை
4. புதுக்கோட்டை அரண்மனை
5. சென்னை சேப்பாக்கம் அரண்மனை
6. சிவகங்கை அரண்மனை
7. எட்டயபுரம் அரண்மனை8. இராமநாதபுரம் அரண்மனை
9. பத்மனாபுரம் அரண்மனை
10. மதுரை அரசி மங்கம்மாள் அரண்மனை
* ராக்கெட்டினை முதலில் கண்டறிந்தவர் சீனர்கள். இது 13ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டது.
* நமது உடலில் 6 லிட்டர் ரத்தம் உள்ளது. இதில் 4 1/2 லிட்டர் உடல் முழுவதும் சுற்றி வருகிறது. மீதி 1 1/2 லிட்டர் ரத்தத்தை சேமிப்பாக உடல் வைத்துள்ளது.
* செவ்வாய் கிரகத்தில் ஒருநாள் என்பது 24 1/2 மணி நேரம். கோடை நண்பகலில் கூட இங்கு 16டிகிரி c நிலை இருக்கும். குளிர்கால இரவிலோ 85டிகிரி c வந்து விடும்.
* 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே ஆமைகள் பூமியில் வாழ்ந்து வருகின்றன. இவை மெதுவாகச் செல்லக் கூடியவை. இவற்றுக்குப் பற்கள் கிடையாது. தாவர வகை உணவைச் சாப்பிடுவதில்லை.
300 ஆண்டுகளுக்கு மேல் ஆமைகள் உயிர் வாழ்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
* தென் அமேரிக்கா பறவைகளின் கண்டம் என அழைக்கப்படுகிறது.
* இந்தியாவில் மிகப் பெரிய பால் பண்ணை குஜராத் மாநிலத்தில் உள்ளது.
* இந்தியாவில் முதன்முதலில் காப்பிச் செடி சிக்மகளூர் என்ற இடத்தில் பயிரிடப்பட்டது.
* உலகிலேயே மிகப் பெரிய வெந்நீர் ஏரி நியூசிலாந்து நாட்டில் உள்ளது.
* ஆஸ்திரேலியா நாட்டிற்கு இரு தேசியகீதங்கள் உள்ளன.
* இந்தியாவையும், பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக் கோட்டின் பெயர் ரெட்கிளிப் எனப்படுகிறது.
* தொழில்புரட்சி முதன் முதலில் நடந்த நாடு இங்கிலாந்து.
* பிரிட்டனின் தேசிய மலர் ரோஜா.
* இந்தியாவின் தேசிய விலங்கு புலி.
* சம்பா நடனத்திற்கு புகழ் பெற்ற நாடு பிரேசில்.
* சோவியத் ரஷ்ய ராணுவத்தின் பெயர் ரெட் ஆர்மி.
* சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவுக்கு கொடுத்த நாடு பிரான்ஸ்.
* 1905 – சுஸான்னே ஆர்டி டாட்டா என்னும் பெண்மணிதான் இந்தியாவில் முதன்முதலாக கார் ஓட்டியவர்.
* 1916 – தோண்டோ கேசவ் கார்வ் என்பவரால் பெண்களுக்கான முதல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. முதலாண்டில் எத்தனை மாணவிகள் படித்தார்கள் தெரியுமா? 5 பேர் தான்.
* 1927 – அகில இந்திய பெண்கள் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது.
* 1959 – அன்னா சாண்டி இந்தியாவின் முதல் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதிவியேற்றார்.
* 1966 – கேப்டன் துர்கா பானர்ஜி, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானச் சேவையின் முதல் பெண் விமானியாவார். இதே ஆண்டில், கமலாதேவி சடோபாத்யாய ‘மகசேசே’ விருதைப் பெற்றார். இந்தியாவின் முத்ல் பெண் பிரதமராக இந்திரா காந்தி பதவியேற்றார்.
* 1970 – ஆசிய விளையாட்டுப் போட்டியில் கமல்ஜித் சாந்து முதன் முதலாக தங்கப் பதக்கம் வென்றார்.
* 1972 – இந்தியாவின் முதல் ஐ.பி.எஸ். அதிகாரியாக கிரண் பேடி காவல் துறையில் பதவியேற்றார்.
* 1989 – முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியாக எம். பாத்திமா பீவி பதிவியேற்றார்.
* 1997 – கல்பனா சாவ்லா, விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் என்னும் சாதனைக்குச் சொந்தக்காரர்.
* 2005 – பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த மந்திர் ராஜ்புட், முதல் பெண் ரயில் எஞ்சின் ஓட்டுனராக ஆஸ்திரேலியா வேல்ஸ் ரயில் கார்ப்பரேஷனில் பணிபுரிந்து சாதனை படைத்தார்.
* 2007 – இந்தியாவின் முத்ல் பெண் குடியரசுத் தலைவராக இருப்பவர் பிரதிபா பாட்டீல்.
* நாம் உபயோகப்படுத்தும் ‘டை’ 3300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.
* இந்தியாவில் மே தினத்தை 1927 -ம் ஆண்டுலிருந்து கொண்டாடப்படுகிறது.
* சிப்பியில் முத்து விளைய 15 ஆண்டுகள் ஆகும்.
* பள்ளிக்கூடத்தை முதன்முதலில் உருவாக்கியவர்கள் ரோமானியர்கள்.

தலை வாழையிலையில் பரிமாறும் முறை!!

1) உப்பு
2) ஊறுகாய்
3) சட்னிப் பொடி
4) கோசும்பரி
5) கோசும்பரி
6) தேங்காய் சட்னி
7) பீன்.. பல்யா
பலாப்பழ உண்டி
9) சித்ரண்ணம்
10) அப்பளம் (பப்படம்)
11) கொரிப்பு
12) இட்லி
13) சாதம்
14) பருப்பு
15) தயிர் வெங்காயம்
16) இரசம்
17) பச்சடி
18) கதிரிக்காய் பக்கோடா
19) கூட்டு
20) பொரியல்
21) அவியல்
22) கத்ரிக்காய் சாம்பார்
23) இனிப்பு
24) வடை
25) இனிப்பு தேங்காய் சட்னி
26) கிச்சிடி
27) காரப்பொரியல்
28) பாயசம்
29) தயிர்
30) மோர்
31) பலகார வகைகள்

பழமொழிகளும் அதன் உண்மை விளக்கங்களும்...!!!

1. ஆயிரம் முறை பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம்.

விளக்கம்: ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பதல்ல. ஆயிரம் முறை போய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்என்பதாகும். அதாவது, நம் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் நாம் பகைமை கொண்டு நம் வீட்டில் நடக்கும் கல்யாணம் போன்ற சுபதினங்களில் நாம் அழைக்காமல் இருப்போம். ஆனால், அவர்களை விட்டுவிடாமல் ஆயிரம் முறை போய் சொல்லியாவது அவர்களை அழைத்து நம் வீட்டில் திருமணம் நடத்தவேண்டும் என்பதாகும். அப்படி நல்ல நோக்கத்திற்காக சொல்லப்பட்ட பழமொழிதான் பின்னாளில் மருவி அல்லது மாறி இப்போது உள்ளதுபோல ஆகிவிட்டது.

2. அடியாத மாடு படியாது.

விளக்கம்: உண்மை பொருள் என்னவென்றால் மாட்டின் கால்களுக்கு லாடம் அடித்தால் தான் அதனால் கடுமையான வேலைகளை (உழுதல் போன்ற ) செய்ய முடியும் என்பது தான்.

3. கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே

வாளோடு முன் தோன்றிய மூத்த குடி

விளக்கம்: (கல்) கல்வி அறிவு தோன்றாத (மன்) மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே, (வாளோடு) வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம் என்பது இன்று கல் தோன்றா மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்று, கல்லும் மண்ணும் தோன்றாத காலத்திலேயே (பூமி உருவாவதற்கு முன்பே) தமிழினம் உருவாகி விட்டதாக அர்த்தப் படுத்தப் படுகின்றது.

4. ஆறிலும் சாவு நூறிலும் சாவு

விளக்கம்: மகாபாரதத்தில் கர்ணனின் தாய் குந்திதேவி பாண்டவர்களுடன் கர்ணனை சேர்ந்து கொள்ளுமாறு கேட்கின்றாள். அப்போது தான் பாண்டவர்களுடன் சேர்ந்து ஆறாவதாக வந்தாலும் தனக்கு சாவு நிச்சயம். கொளரவர்கள் நூறு பேருடன் சேர்ந்திருந்தாலும் சாவு நிச்சயம். எனவே செய்நன்றிக் கடனுக்காக தான் கௌரவர்களுடனேயே இருந்து விடப் போவதாக கர்ணன் கூறுகின்றான். அதாவது ஐந்து பேருடன் ஆறாவதாகச் சேர்ந்தாலும் சாவுதான். நூறு பேர் கௌரவர்களுடன் இருந்தாலும் சாவுதான் என்பதுதான் அது. ஆனால் ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்பது இன்று வயதைக் குறிப்பதாக அர்த்தப்பட்டு விட்டது.

5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.

விளக்கம்: உண்டி என்பது சாப்பாடு. சாப்பாடு செய்வதற்கான நேரம் அதிகமாகும் பட்சத்தில, பெண்கள் சமையலறையிலேயே முடங்கி விடுகிறார்கள். இதனால் இவர்கள் மற்றைய விடயங்களிலிருந்து பின்னுக்குப் போய் விடுகிறார்கள். இந்த நிலை மாறுவதற்கு அவர்கள் சுவையான சமையலை குறுகிய நேரத்துக்குள் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே பெண்களுக்கு அழகு.



6. நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.

விளக்கம்: பண்டைக்காலத்தில் அற்புத சிற்பங்கள் வடிக்கப் பட்டன. மாமல்லபுரம், தஞ்சை, காஞ்சி சிற்பங்கள் இதற்கு எடுத்துக் காட்டாக விளங்கின. இங்கே ஒரு சிற்பி நாயின் உருவத்தை கல்லில் சிற்பமாக வடித்திருந்தான். அந்த சிற்பத்தை ஒருவன் மிகவும் ரசித்தான். அந்த சுவைஞனைச் சிற்பி கேட்டான் "என் சிற்பம் எப்படி? என்று. அதற்குச் சுவைஞன் சொன்ன பதில் 'நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்' என்பதாக இருந்தது. அதாவது அதில் நாயைப் பார்த்தால் கல் தெரியவில்லை. கல்லைப் பார்த்தால் நாய் தெரியவில்லை.

7. பசி வந்திட பத்தும் பறந்து போகும்

விளக்கம்: அறிவுடைமை, இன்சொல், ஈகை, தவம், காதல், தானம், தொழில், கல்வி, குலப்பெருமை, மானம் ஆகிய பத்து குணங்களும் பசி என்று வந்து விட்டால் பறந்து போகும் என்பது உண்மை.

8. போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை

விளக்கம்: இந்த பழமொழியின் அர்த்தம், போக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை. வாக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பதாகும்.

9. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.

விளக்கம்: இதன் அர்த்தம், ஒருவனின் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது (என்னதான் அவன் மனைவியாக இருந்தாலும் அவள் இன்னொருவன் அதாவது ஊரான் பிள்ளைதானே) அவளை நன்றாக கவனித்து கொண்டால் , அவளின் வயிற்றில் வளரும் தன்பிள்ளை தானாக வளரும் என்பதாகும்.

10. சேலை கட்டிய மாதரை நம்பாதே

விளக்கம்: சேல் அகட்டிய மாதரை நம்பாதே என்பது தான் அதன் உண்மை பொருள். சேல் என்றால் கண். தன் கணவனுடன் இருக்கும்போது கண்களை அகட்டி வேறு ஒரு ஆடவனை பார்க்கும் பெண்களை நம்பாதே என்பது தான் உண்மை பொருள்.

11. மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே.

விளக்கம்: மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை. அதாவது ஆற்றுப்படுகைகளில் மண் குதிர்கள் இருக்கும். அவற்றில் கால் வைத்தால் கால்கள் உள்ளே பதியும். அந்த மண் குதிரை (குதிர் ஐ) நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை.