Wednesday, June 29, 2011

மங்காத்தா" ஹைலைட்ஸ்!

அஜித்தின் ஐம்பதாவது படமான 'மங்காத்தா' ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதிக்குள் வெளிவர இருக்கிறது என்று முன்பே செய்தி கொடுத்திருந்தோம். தற்போது கிடைத்துள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி மூன்று நாட்களுக்கு முன்னதாகவே, அதாவது ஆகஸ்ட் 12-ம் தேதியே ரிலீஸ் செய்யப்பட இருக்கிறதாம். இப்படத்தின் தயாரிப்பாளரான தயாநிதி அழகிரியை தொடர்புகொள்ளும் ரசிகர்கள் எல்லோரும் 'மங்காத்தா' ரிலீஸ் எப்போது? எப்போது? என்ற கேள்விகளால் துளைத்தெடுக்கின்றனராம். இதற்காக தனது டுவிட்டர் இணையபக்கத்தில் நேற்று அவர் பதில் அளித்ததாவது: 'மங்காத்தா' படக்குழுவினர் அனைவரும் ஆகஸ்ட் 12-ம் தேதி ரிலீஸ் செய்வதற்காக கடுமையாக உழைத்து வருகிறார்கள். தல ரசிகர்களே மகிழ்ச்சியா..? இந்த அறிவிப்பால் சந்தோஷமா..? என்று குறிப்பிட்டிருக்கிறார். 'மங்காத்தா'வின் ஹைலைட்ஸ் இதோ உங்களுக்காக: கோலிவுட்டில் இப்போது மோஸ்ட் வான்டட் லிஸ்ட்டில் இருக்கும் படம் 'மங்காத்தா'. சில ஆண்டுகளாகவே சீரியஸ் தொனி படங்களில் நடித்து வரும் அஜித், வேண்டி விரும்பி வெங்கட் பிரபுவின் காமெடி ட்ரீட்மெண்ட் திரைக்கதையைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார். தல ஹீரோ, வாலு டைரக்டர் என்ற வித்தியாச காம்பினேஷன் நிச்சயம் அஜித் ரசிகர்களை உற்சாகமூட்டும். 'எல்லோரும் கெட்டவன்னா நான் ரொம்ப கெட்டவன்' இதுதான் படத்தில் அஜித்துக்கான பஞ்ச் லைன். ரஜினியின் ஹிட்டான 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை' பாடலின் சில வரிகள் ரீ-மிக்ஸில் துவங்குகிறது. 'ஒரு அம்பானி பரம்பரை... அஞ்சாவது தலைமுறை.. ஆனந்தம் ஒரு முறைதான்'! என்று அஜித் பாணிக்கு மாறுகிறது பாடல். படத்தில் அஜித்தின் கேரக்டர் பெயர் வெங்கட் பிரபுவுக்கே தெரியாததாக இருந்ததாம். 'என்ன பெயர் வைக்கப் போறே'ன்னு அஜித் கேட்டுக் கொண்டே இருந்தாராம், இப்போது கேரக்டருக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது மட்டும் சஸ்பென்ஸ்.

Friday, June 24, 2011

ஐ.ஏ.எஸ்.என்பது அக்னி வேள்வி அல்ல!

''ஐ.ஏ.எஸ். பாஸ் பண்றதுக்குத் தேவையான தகுதிகள் என்ன..?’' என்று 'இந்திய முதல்வர் திவ்யதர்ஷினி'யிடம், (கடந்த இதழ் கவர் ஸ்டோரி) பியூட்டி பார்லரில் வைத்து சென்னை, விமன்ஸ் கிறிஸ்டியன் காலேஜ் பொண்ணு ரிமோனா கேட்டபோது,



''ஐ.ஏ.எஸ். ஆகும் தகுதி எனக்கு மட்டுமில்ல, எங்க அக்கா, அம்மா, ஃப்ரெண்ட்ஸ், என்னோடு பாங்க்ல வேலை பார்த்தவங்கனு பல பெண்களுக்கும் இருக்கு. சொல்லப்போனா, தேசிய அளவுல இந்த எக்ஸாம்ல முதலாவது வந்திருக்கிற என்னைவிட, இவங்கள்ல பலருக்கு அதிக தகுதிகள் இருக்கு. ஆனா, அவங்கெல்லாம் அதுக்கு முயற்சி செய்யல; நான் முயற்சி செய்தேன். அதுதான் வித்தியாசம்!'' - அத்தனைப் பக்குவமாக பதில் தந்தார் திவ்யதர்ஷினி!

''நாம ஒரு வருஷம் கஷ்டப்பட்டு படிச்சிருப்போம். பிரிலிம்ஸ், மெயின் எக்ஸாமை பெரும்முயற்சியால தாண்டி வந்திருப்போம். ஆனா, சுமார் அரைமணி நேரமே நடக்கற நேர்முகத் தேர்வுதான் நாம ஐ.ஏ.எஸ்-ஸா, ஐ.பி.எஸ்-ஸா, ஐ.ஃஎப்.எஸ்-ஸா... இல்லை எதுவுமே இல்லாம வெளியேறப் போறோமானு முடிவு செய்யும்'' என்ற திவ்யா, தன் நேர்முகத் தேர்வு நிமிடங்களை பகிர்ந்து கொண்டார்...

''டெல்லியில, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழு உறுப்பினரான ரஜினி ரஸ்தன் தலைமையில ஒரு குழு தயாரா இருந்தாங்க. எதிர்பாராதவிதமா முதல் ஆளா உள்ளே கூப்பிட்டதால, பதற்றமா இருந்தது. அதைப் புரிஞ்சுக்கிட்டு, சகஜ நிலைக்கு கொண்டு வர்றதுக்காக 'உன் பேருக்கு என்ன அர்த்தம்? இப்பதான் முதல் முதலா டெல்லிக்கு வந்திருக்கியா? டெல்லியில என்னவெல்லாம் பார்த்தே?’னு கேஷ§வலா பேச்சை தொடங்கினாங்க ரஜினி. டெல்லியில குதுப்மினாரை பார்த்ததா நான் சொல்ல, 'இவ்வளவு உயரமான கட்டடத்தை எப்படி கட்டியிருப்பாங்கனு தெரியுமா?’னு மெள்ள சப்ஜெக்ட்டுக்கு வந்தாங்க. 'எனக்கு தெரியாது’னு சொன்னேன். 'பரவாயில்லை. யூகம் பண்ணித்தான் சொல்லேன்’னாங்க. நான் யூகமா சொன்ன பதிலும் நிஜமான பதிலும் நெருக்கமாவே இருந்ததுனு, அவங்க கொடுத்த விளக்கத்தை வெச்சு தெரிஞ்சுக்கிட்டேன்'' என்றவர்,

''தொடர்ந்து, நான் சட்டத்துறை மாணவிங்கறதால அவசரச் சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம்னு சட்டங்கள் பத்தின கேள்விகள், கருத்துகளாவே கேட்டாங்க. ஒரு கட்டத்துல அது ஒரு விவாதமாவும் தொடர்ந்தது. ஒரு சிச்சுவேஷன் கொடுத்து 'இப்போ நீங்க என்ன செய்வீங்க?’னு கேட்கறது, இன்டர்வியூவுல ஒரு முக்கிய தருணமா இருக்கும். எனக்கு அவங்க கொடுத்த சிச்சுவேஷன் கொஞ்சம் வினோதமாவே இருந்தது.

'உன் கணவரும் உன்னைப் போலவே ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி. திருமணம் ஆன சில வருடங்கள் கழித்து அவர் லஞ்சம் வாங்குவது உனக்கு தெரிய வருகிறது. அப்போது என்ன செய்வாய்?’

'இப்படிப்பட்டவர் எனக்கு கணவராக வருவதற்கு சான்ஸே இல்லை...’

'திருமணத்துக்கு பிறகு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர் லஞ்சம் வாங்கும் பழக்கத்துக்கு ஆளாகிவிட்டார் என்று வைத்துக் கொண்டு கேள்விக்கு பதில் சொல்.’

'பொறுமையாக பேசி... அவரை திருத்துவதற்கு முயற்சிப்பேன். திருந்தவில்லை என்றால் ஊழல் தடுப்புத்துறை போலீஸாரிடம் முறையிட்டு கைது செய்ய வைத்து விடுவேன்.’

'உங்களுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு பதில் சொல். நீ இப்படி செய்வதால் உன்னுடைய குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும் என்று யோசிக்க மாட்டாயா?’

'லஞ்சம் வாங்கும் ஒரு ஊழல் அதிகாரிக்கு பிள்ளைகளாக இருப்பதைவிட, சமூக விரோதியாக மாறும் கணவனை திருத்துவதற்கும் தண்டிப்பதற்கும் தயங்காத ஒரு நேர்மையான பெண்ணின் பிள்ளைகளாக அவர்கள் வளர்வதுதான் நல்லது என்று முடிவெடுப்பேன்!’ - சரிதானே..?!'' என்று திவ்யா சிரிக்க, ''யெஸ்'' என்று அத்தனை பெண்களும் 'ஓ' போட்டனர்!

சென்னை, அரும்பாக்கத்தில் இருக்கிறது 'பிரபாஸ் ஐ.ஏ.எஸ். கோச்சிங் அகாடமி’. இதுதான், திவ்யா இந்த தேர்வுக்கு பயிற்சி எடுத்த களம். அங்கே திவ்யாவோடு சென்றோம். அவருடன் இந்தத் தேர்வை எழுதி, அகில இந்திய அளவில் 22-வது ராங்க் வாங்கி இருக்கும் விஜய கார்த்திகேயன், பயிற்சியாளர்கள் ஷ்யாம்சுந்தர், அபிராமி, சங்கீதா மற்றும் அகாடமியின் தலைவர் பிரபாகரன் ஆகியோரும் சேர்ந்து கொள்ள, அங்கே கலகலப்பாக கரைந்தன நிமிடங்கள்.

நிறைவாக, ''ஐ.ஏ.எஸ். என்பது அக்னி வேள்வி அல்ல. தீர்க்கமான லட்சியமும் சமரசங்கள் இல்லாத முயற்சியும் இருந்தால், உங்கள் வீட்டிலும் மாட்டலாம் ஐ.ஏ.எஸ். நேம் போர்டு!''

- சினேகமாக திவ்யா அழைக்க, மற்றவர்களும் முழுமனதோடு ஆமோதித்தனர்.

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்



Thursday, June 23, 2011

கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்களுக்கு LAPTOP1


மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள இலவச லேப்டாப் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை நந்தனம் எல்காட் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இந்த ஆண்டில் அரசு இன்ஜினியரிங் கல்லூரிகளில் 2 மற்றும் 3ம் ஆண்டுகள், கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளில் 1 மற்றும் 3ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அதிமுக தேர்தல் அறிக்கையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு "லேப்டாப்கள்" வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து அதிமுக ஆட்சி பொறுப்பேற்றதும் இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு முதற்கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு கலைக் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள், இன்ஜினியரிங் கல்லூரிகளில் படிக்கும் 9.12 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப்கள் வழங்கப்படுகிறது