

''நாம ஒரு வருஷம் கஷ்டப்பட்டு படிச்சிருப்போம். பிரிலிம்ஸ், மெயின் எக்ஸாமை பெரும்முயற்சியால தாண்டி வந்திருப்போம். ஆனா, சுமார் அரைமணி நேரமே நடக்கற நேர்முகத் தேர்வுதான் நாம ஐ.ஏ.எஸ்-ஸா, ஐ.பி.எஸ்-ஸா, ஐ.ஃஎப்.எஸ்-ஸா... இல்லை எதுவுமே இல்லாம வெளியேறப் போறோமானு முடிவு செய்யும்'' என்ற திவ்யா, தன் நேர்முகத் தேர்வு நிமிடங்களை பகிர்ந்து கொண்டார்...
''டெல்லியில, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழு உறுப்பினரான ரஜினி ரஸ்தன் தலைமையில ஒரு குழு தயாரா இருந்தாங்க. எதிர்பாராதவிதமா முதல் ஆளா உள்ளே கூப்பிட்டதால, பதற்றமா இருந்தது. அதைப் புரிஞ்சுக்கிட்டு, சகஜ நிலைக்கு கொண்டு வர்றதுக்காக 'உன் பேருக்கு என்ன அர்த்தம்? இப்பதான் முதல் முதலா டெல்லிக்கு வந்திருக்கியா? டெல்லியில என்னவெல்லாம் பார்த்தே?’னு கேஷ§வலா பேச்சை தொடங்கினாங்க ரஜினி. டெல்லியில குதுப்மினாரை பார்த்ததா நான் சொல்ல, 'இவ்வளவு உயரமான கட்டடத்தை எப்படி கட்டியிருப்பாங்கனு தெரியுமா?’னு மெள்ள சப்ஜெக்ட்டுக்கு வந்தாங்க. 'எனக்கு தெரியாது’னு சொன்னேன். 'பரவாயில்லை. யூகம் பண்ணித்தான் சொல்லேன்’னாங்க. நான் யூகமா சொன்ன பதிலும் நிஜமான பதிலும் நெருக்கமாவே இருந்ததுனு, அவங்க கொடுத்த விளக்கத்தை வெச்சு தெரிஞ்சுக்கிட்டேன்'' என்றவர்,
''தொடர்ந்து, நான் சட்டத்துறை மாணவிங்கறதால அவசரச் சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம்னு சட்டங்கள் பத்தின கேள்விகள், கருத்துகளாவே கேட்டாங்க. ஒரு கட்டத்துல அது ஒரு விவாதமாவும் தொடர்ந்தது. ஒரு சிச்சுவேஷன் கொடுத்து 'இப்போ நீங்க என்ன செய்வீங்க?’னு கேட்கறது, இன்டர்வியூவுல ஒரு முக்கிய தருணமா இருக்கும். எனக்கு அவங்க கொடுத்த சிச்சுவேஷன் கொஞ்சம் வினோதமாவே இருந்தது.
'உன் கணவரும் உன்னைப் போலவே ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி. திருமணம் ஆன சில வருடங்கள் கழித்து அவர் லஞ்சம் வாங்குவது உனக்கு தெரிய வருகிறது. அப்போது என்ன செய்வாய்?’
'இப்படிப்பட்டவர் எனக்கு கணவராக வருவதற்கு சான்ஸே இல்லை...’
'திருமணத்துக்கு பிறகு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர் லஞ்சம் வாங்கும் பழக்கத்துக்கு ஆளாகிவிட்டார் என்று வைத்துக் கொண்டு கேள்விக்கு பதில் சொல்.’
'பொறுமையாக பேசி... அவரை திருத்துவதற்கு முயற்சிப்பேன். திருந்தவில்லை என்றால் ஊழல் தடுப்புத்துறை போலீஸாரிடம் முறையிட்டு கைது செய்ய வைத்து விடுவேன்.’
'உங்களுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு பதில் சொல். நீ இப்படி செய்வதால் உன்னுடைய குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும் என்று யோசிக்க மாட்டாயா?’
'லஞ்சம் வாங்கும் ஒரு ஊழல் அதிகாரிக்கு பிள்ளைகளாக இருப்பதைவிட, சமூக விரோதியாக மாறும் கணவனை திருத்துவதற்கும் தண்டிப்பதற்கும் தயங்காத ஒரு நேர்மையான பெண்ணின் பிள்ளைகளாக அவர்கள் வளர்வதுதான் நல்லது என்று முடிவெடுப்பேன்!’ - சரிதானே..?!'' என்று திவ்யா சிரிக்க, ''யெஸ்'' என்று அத்தனை பெண்களும் 'ஓ' போட்டனர்!
சென்னை, அரும்பாக்கத்தில் இருக்கிறது 'பிரபாஸ் ஐ.ஏ.எஸ். கோச்சிங் அகாடமி’. இதுதான், திவ்யா இந்த தேர்வுக்கு பயிற்சி எடுத்த களம். அங்கே திவ்யாவோடு சென்றோம். அவருடன் இந்தத் தேர்வை எழுதி, அகில இந்திய அளவில் 22-வது ராங்க் வாங்கி இருக்கும் விஜய கார்த்திகேயன், பயிற்சியாளர்கள் ஷ்யாம்சுந்தர், அபிராமி, சங்கீதா மற்றும் அகாடமியின் தலைவர் பிரபாகரன் ஆகியோரும் சேர்ந்து கொள்ள, அங்கே கலகலப்பாக கரைந்தன நிமிடங்கள்.
நிறைவாக, ''ஐ.ஏ.எஸ். என்பது அக்னி வேள்வி அல்ல. தீர்க்கமான லட்சியமும் சமரசங்கள் இல்லாத முயற்சியும் இருந்தால், உங்கள் வீட்டிலும் மாட்டலாம் ஐ.ஏ.எஸ். நேம் போர்டு!''
- சினேகமாக திவ்யா அழைக்க, மற்றவர்களும் முழுமனதோடு ஆமோதித்தனர்.
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

Sri Srinivasa Perumal Temple or Sri Perumal Temple , Little India , Serangoon Road , Singapore
Sri Venkateswara Swami Temple , Helensburgh , Sydney , Australia
Lord Vishnu Temple , Angkor , Cambodia
Sri Venkateswara Temple , Bridgewater , NJ , US
Venkateswara Swami temple , Riverdale near Atlanta , Georgia , US
Shiva-Vishnu Temple , Livermore , California , US
Sri Murugan Temple Batu Caves , Penang , Malaysia
Lord Vishnu Temple , Angkor , Cambodia
BAPS Shri Swaminarayan Mandir , London ( Neasden Temple ) , United States
Mother Temple of Besakih , Bali , Indonesia
Sri Venkateswara Swami Temple of Greater Chicago - Aurora , Illinois , United States
Shiva-Vishnu Temple , Livermore , California , US
Murugan Temple , Sydney , Australia
BAPS Shri Swaminarayan Mandir - Toronto , Canada
Velmurugan Gnana Muneeswarar Temple , Rivervale Crescent Sengkang , Singapore