2016 தமிழ்நாடு தேர்தல் - ஓர் கற்பனை அலசல்
- இந்த தேர்தலில் அ.தி.மு.க பொது செயலாளர் ஜெயலலிதா அவர்கள் கூட்டணி கட்சியான நடிகர் விஜய்யின் "மக்கள் இயக்கம்" கட்சிக்கு 25 சீட்டுக்களை ஒதுக்கி உள்ளார்
- கடைசி பேச்சு வார்த்தைக்காக திரு ஒ.பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் அவர்கள் திரு விஜயகாந்தை சந்தித்து, அம்மா அவர்கள் தங்களின் கட்சிக்கு 9 சீட்டுகள் தான் தரப்படும் என்ற செய்தியை முன்மொழிந்தனர்.
- கருணாநிதியின் குடும்ப கட்சியான தி.மு.க அவரது இறப்புக்கு பின்னர் இரண்டாக பிரிந்தது. திரு.ஸ்டாலினை தலைவராக கொண்டு ஸ்.தி.மு.க (ஸ்டாலின் தி.மு.க) மற்றும் திரு. அழகிரியை தலைவராக கொண்டு ம.அ.தி.மு.க (மதுரை அழகிரி தி.மு.க) என்றானது.
- கடந்த தேர்தலில் தலா 10 மற்றும் 9 இடங்களில் போட்டியிட்டு வென்ற ம.கம்யூனிஸ்ட் மற்றும் இ.கம்யூனிஸ்ட் இந்த முறை அ.தி.மு.க. வில் கூட்டணி கட்சியில் எந்த பங்கும் இல்லை என்று ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
- இந்தமுறை தேர்தல் பிரச்சாரத்தில் நடிகர் வடிவேலுவை தங்களுக்கு ஆதரவாக பேசுமாறு, தே.மு.தி.க கட்சியின் தலைவரும் பொதுசெயலாளரும் ஆன திரு.விஜயகாந்த் அவர்கள் நேற்று வடிவேலுவை சந்தித்து கேட்டு கொண்டுள்ளார்.
- கனிமொழி மற்றும் ராஜா தொடர்பான 2G spectrum ஊழல் தொடர்பான கேள்விகளுக்கு, ஸ்.தி.மு.க (ஸ்டாலின் தி.மு.க) தலைவரான திரு. ஸ்டாலின் அவர்கள் : அந்த கேஸ் இன்னும் விசாரணையில் உள்ளது. கேஸ் முடியும் வரை அது தொடர்பாக எந்த அறிக்கையும் தரபோவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
- வைகை புயல் வடிவேலு தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்துவிட்டு சென்னையில் தொடங்கினர். இந்த முறை நடிகர் விஜய்யை சகட்டு மேனிக்கு திட்டி பிரச்சாரம் செய்தார். (பின் குறிப்பு: அவர் பிரச்சாரத்தில் மு.க.அழகிரி , ஜெயலலிதா மற்றும் மு.க.ஸ்டாலின் பற்றி எந்த வித கருத்தும் தெரிவிக்கவில்லை)
- சென்ற தேர்தலில் 63 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி இந்த முறை யாரும் கூட்டணிக்கு அழைகாததால், தேர்தலை புறகணிக்க முடிவு செய்துள்ளது.
- சென்ற தேர்தலை புறகணித்த ம.தி.மு.க, இந்த முறை முன்றாவது அணியை உருவாக்க தன தலைமையில் ஸ்.தி.மு.க (ஸ்டாலின் தி.மு.க) மற்றும் ம.அ.தி.மு.க (மதுரை அழகிரி தி.மு.க) உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
- இந்த ஆட்சியில் 16 முறை (1 + 6 = 7 - அம்மாவின் ராசியான நம்பர்) அமைச்சரவையை மாற்றி அமைத்த ஜெயலலிதா. இந்த தேர்தல் வாக்குறுதியாக, இந்த முறை அனைத்து அமைச்சரவைகளும் தானே பார்த்துகொள்வதாக தெரிவித்துள்ளார்
- கடந்த தேர்தலில் விஜயகாந்திடம் "கொட்டு" வாங்கியதால் ஜெயித்தேன் என்று தர்மபுரி MLA கூறியதை தொடர்ந்து, விஜயகாந்த் தனது வேட்பாளர்கள் அனைவரையும் தன்னிடம் "கொட்டு" வாங்கியதற்கு பின்னரே தேர்தலில் நிற்க வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளார்.
- ஸ்.தி.மு.க (ஸ்டாலின் தி.மு.க) மற்றும் (மதுரை அழகிரி தி.மு.க) செயல்பாடுகள் திருப்தி அளிக்காத காரணத்தினால் தான், நான் மு.தி.மு.க (முரசொலி தி.மு.க) கட்சியை தொடங்கி உள்ளேன் என்று அந்த கட்சியின் தலைவர் திரு.தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
- 31 இடங்களில் போட்டியிட்டு வெறும் 2 இடங்களில் ஜெயித்த பா.ம.க. தான் கேட்ட 85 தொகுதிகள் தராத காரணத்தினால் 4 அணியை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
- லட்சிய தி.மு.க. தலைவர் T . ராஜேந்தர் தனது மகன் சிலம்பரசனை பொதுசெயலராக அறிவித்துள்ளார். மேலும் அவர் பா.ம.க 4 அணியை உருவாக்கினால் நாங்கள் 5 வது அணியை உருவாக்குவோம், எங்களின் கடல் தாண்டிய பலத்தை நிரூபிப்போம் என்று தெரிவித்துள்ளார்
- சென்ற தேர்தலில் 234 தொகுதியில் போட்டியிட்டு ஒன்றில் கூட ஜெயிக்காத பா.ஜ.க , இந்த முறையும் 234 தொகுதிளில் போட்டியிடுகிறது.
- காங்கிரஸ் கோஷ்டி மோதல் தற்பொழுது குடும்ப சண்டையாக மாறி, நேற்று "சரவணா ஸ்டோர்ஸ்" வந்திருந்த தற்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் இ.வி.கே.யஸ். இளங்கோவன் மனைவியும், மாஜி தலைவர் தங்கபாலுவின் மனைவியும் முடிகளை பிடித்து சண்டை போட்டது அனைவரும் கண்டுகொள்ளாமல் போனது தொலைகாட்சி நண்பர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. மக்களிடம் கேட்டதற்கு, எப்பவுமே நடக்கறது தானே சார்.. பாத்து பாத்து போர் அடிசிபோச்சு என்றார்கள்.
No comments:
Post a Comment