Sunday, June 1, 2014

தற்கால "பேர் அன்ட் லவ்லி உலகம்" அதைபற்றி கவலைபடுவது இல்லையே?



வெயில் காலம் வந்தால் பலரும் சூரியனை கண்டு அஞ்சி நடுங்குவார்கள். அழகு போய்விடும், தோல் கருத்து விடும், ஸ்கின் கான்சர் வந்துவிடும் என்ற மாத்ரீயான அச்சங்களுக்கு குறைவு இல்லை. இதை பயன்படுத்தி கம்பனிகள் சன்ஸ்க்ரீன் எல்லாம் விற்று லாபம் சம்பாதிப்பார்கள்.
சூரியன் அஞ்சவேண்டிய விஷயம் இல்லை. அது தான் ஆதிபகவன். உலகின் அனைத்து உயிரினங்களுக்கும் உணவளிக்கும் அன்னதாதா. தாவரங்கள் சூரிய ஒளி மூலமே போட்டோசிந்தசிஸ் செய்து வளர்கின்றன. மிருகங்கள் தாவரங்களையே உணவுக்கு நம்பியுள்ளன. ஆக சூரிய ஒளியே உயிரின் மூல ஆதாரம். சூரிய ஒளி நமக்கு அளிக்கும் நன்மைகள் அளவற்றவை.
சூரிய குளியல் பிரெஸ்ட் கான்சரை தடுக்கும்
அதில் உள்ள வைட்டமின் டி3 பல், எலும்பு, டயாப்டிஸ் முதலிய பல வியாதிகளுக்கு அருமருந்து
உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒயிட் பிளட் செல்லை சூரிய ஒளி அதிகரிக்கும்
ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகரித்து தசைகளுக்கு உயிர்ப்பை வழங்கும்
பிளட்பிரஷர் இருப்பவர்கள் சூரிய குளியலால் பிரஷரை இறக்கிகொள்லலாம்.
படை, முகபரு, பங்கஸ், காயங்களை ஆற்றுதல் இவற்றை செய்யும் சக்தி படைத்தது சூரிய ஒளி. காயம்பட்ட இடங்களை சூரிய ஒளியில் காட்டினால் அதில் உள்ல பாக்டிரியாக்களை சூரிய வெப்பம் கொன்றுவிடும்.
டிபர்ஷன் எனும் மன அழுத்தத்தையும் போக்க வல்லது சூரிய குளீயல்
சன்பாத் எடுப்பது எப்படி?
வெயிலில் ஓடியாடி வேலை செய்பவர்களுக்கு சன்பாத் எனும் கான்செப்ட் அவசியம் இல்லை. நாள் முழுக்க ஆபிஸில் இருக்கும் நம்மை மாதிரி ஒயிட்காலர் ஆசாமிகள் வார விடுமுறையிலாவது சன்பாத் எடுப்பது நல்லது
விதிகள்:
உடலின் துணீமறைக்காத பகுதிகளில் நேரடி சூரிய வெளிச்சம் படவேண்டும். லோஷன், சன்ஸ்க்ரீன் எதுவும் கூடாது. ஜன்னல் கண்னாடி மூலம் வரும் வெளிச்சமும் செல்லாது. நேரடி சூரிய ஒளி உடலில் படவேண்டும்
குளிர் நாடுகளில் இருப்பவர்கள் (அட்லாண்டாவுக்கு வடக்கே), காலை 10- 2 வரை மார்ச் முதல் அக்டோபர் வரை தினம் 40 நிமிடம் சன்பாத் எடுக்கலாம்.
வெப்ப நாடுகளில் இருப்பவர்கள் வெயிலை பொறுத்து அதற்கு முன்/பின் சன்பாத் எடுக்கலாம். உச்சிவெயிலில் சன்பாத் எடுத்தால் தோல் எரிவது போல் தோன்றுவத்கு முன்பே சன்பாத்தை நிறுத்திவிடவும். தோல் எரிவது, சன் பர்ன் ஆவது கூடாது. அது தொடர்ந்தால் ஸ்கின் கான்சர் வரும். வெயிலை பொறுத்து அதற்கு முன்பே சன்பாத்தை நிறுத்திவிடவும்.
தலைக்கு தொப்பி, கண்ணுக்கு கண்னாடி அணியவேண்டும்.
ஆண்கள் சட்டை அணியாமல், ஆப் டிரவுசர்/பெர்முடா அணிந்து சன்பாத் எடுக்கலாம். வெயிலில் ஓடியாடி விளையாடலாம். தோட்ட வேலை செய்யலாம். பெண்கள் உடையை பொறுத்து வெயில் படும் பகுதி குறைவு என்பதால் அவர்கள் சற்று அதிக நேரம் வெயிலில் நிற்கவேண்டி வரும்.
சன்பாத் எடுத்த சமயம் போக மற்ற சமயங்களில் சூரிய வெளிச்சம் படாமல் நிழலில் இருக்கலம்.
நிறைய நீர் அருந்தி ஹைட்ரேட் செய்துகொள்வது அவசியம்.
இதனால் தோல் கறுக்கும். டேன் ஆகும். ஆனால் அது தற்காலிகமானதுதான். மற்றபடி பரிணாமவியலின்படி கருத்த தோல் தான் வெள்ளைதோலை விட ஆரோக்கியமானது. ஆனால் தற்கால "பேர் அன்ட் லவ்லி உலகம்" அதைபற்றி கவலைபடுவது இல்லையே?

Tuesday, October 22, 2013

சொர்க்கத்தை மண்ணில் காட்டுவது பாசம் நிறைந்த குடும்பம்!!!

*மகளை கொஞ்சும் போது குத்தக் கூடாது என்பதற்காக தினமும் சவரம் செய்வது தந்தையின் பாசம்.

*மகளுக்கு குடையாக வேண்டும் என்றே சேலை முந்தானையை பெரிதாக விட்டு சேலை கட்டுவது அன்னையின் பாசம்.

*பேத்திக்கு தொட்டில் கட்ட வேண்டும் என்றே தன் மணநாள் பட்டுச் சேலையை பத்திரப்படுத்துவது பாட்டியின் பாசம்.

*பேரனுக்கு தும்மல் வந்து விடும் என்று அவனைக் கண்டதும் மூக்குப் பொடியை ஒளித்து வைப்பது தாத்தாவின் பாசம்.

*தங்கைக்காக கிரிக்கெட் சேனலை விட்டுகொடுத்து சேனலை மாற்றுவது அண்ணனின் பாசம்.

*அண்ணனின் தவறுக்கு தந்தையிடம் திட்டு வாங்குவது தங்கையின் பாசம்.

*தனக்கு பிடித்ததை தன் தம்பிக்கு கொடுத்து அழகு பார்ப்பது அக்காவின் பாசம்.

Sunday, September 22, 2013

ஏ பெண்ணே...!!

ஏ பெண்ணே...!!

மண்ணைப் பார்த்து நடந்து வரும் ஆணின் 
மனதிற்கு சொல்லிட வேண்டும் உன் கால் மிஞ்சு..

நிமிர்ந்து பார்த்து நடந்து வரும் ஆணின் நெஞ்சத்திற்கு சொல்லிட வேண்டும் உன் நெற்றிக் குங்குமம்...

கண்கள் பார்த்து பேசிடும் ஆணின் கவனத்திற்கு சொல்லிட வேண்டும் உன் கழுத்து மாங்கல்யம்...

நீ இன்னொருவனின் இல்லாள் என்று...

கண் மை இட்டு கண்களை அழகாக எடுத்துக் காட்டுவதில் காலம் தவறாத நீ கழுத்தில் இருக்கும் மங்கல்யத்தை மறைப்பதேனோ??

குதிகால் செருப்பில் காலை அலங்கரிக்க மறக்காத நீ
கால் விரலின் மிஞ்சியை மறந்ததேனோ??

தலைவிரி கோலமே நாகரீகமெனும் தத்துவத்தை விரும்பும் நீ தலை வகுட்டில் வைக்கும் குங்குமத்தை விரும்பாததேனோ??

இவைகளை நீ சம்பிரதாயங்கள் என்கிறாய் நான் சாட்சிகள் என்கிறேன்..

உன்னவனுக்கு மட்டுமே நீ உரியவளாய் இருக்க..
எவர் மனதிலும் நீ மாயம் செய்யாமல் இருக்க..
மறைத்திடாதே ஒரு போதும் இந்தச் சாட்சிகளை..

# நவீனமயப்படுத்தல் என்ற பெயரில் பெருமதிமிகு பண்பாடு மற்றும் பாரம்பரியம் என்பவற்றை புறக்கணிக்கவோ மாற்றியமைக்கவோ வேண்டாம்.

Sunday, September 15, 2013

மனித உறவுகள் மேம்பட!!

•தானே பெரியவன், தானே சிறந்தவன் என்ற அகந்தையை (EGO) விடுங்கள்.
•அர்த்தமில்லாமலும், தேவையில்லாமலும், பின் விளைவு அறியாமலும் பேசிக்கொண்டே இருப்பதை விடுங்கள். (LOOSE TALK)
•எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாசூக்காகக் கையாளுங்கள். (DIPLOMACY)
•விட்டுக்கொடுங்கள். (COMPROMISE)
•சில நேரங்களின் சிற்சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என்று உணருங்கள். (TOLERANCE)
• நீங்கள் சொன்னதே சரி, நீங்கள் செய்ததே என்று கடைசி வரை வாதாடாதீர்கள். ( ADAMANT ARGUMENT)
•குறிகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள். (NARROW MINDEDNESS)
•உண்மை எது, பொய் எது என்று அறியாத நிலையில் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் , அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள். (CARRYING TALES)
•மற்றவர்களைவிட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள். (SUPERIORITY COMPLEX)
•அளவுக்கு அதிகமாய், தேவைக்கு அதிகமாய் ஆசைப்படாதீர்கள். (OVER EXPECTATION)
•எல்லோரிடத்திலும் எல்லா விஷ யங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்.
•கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்.
•அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.
•உங்கள் கருத்தக்களில் உடும்புப்பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள். (FLEXIBILITY)
•மற்றவர் கருத்துக்களை, செயல்களை, நடக்கின்ற நிகழ்சிகளைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். (MISUNDERSTANDING)
•மற்றவர்களுக்கு உரிய மரியாதையைக் காட்டவும். மற்றும் இனிய இதமான சொற்களைப் பயன் படுத்தவும் தவறாதீர்கள். (COURTESY)
•புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச்சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள்.
•பேச்சிலும், நடத்தையிலும் திமிர் தனத்தையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து அடக்கத்தையும், பண்பாட்டையும் காட்டுங்கள்.
•அவப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து அளவளாவுங்கள். (FRAKNESS)
•பிணக்கு ஏற்படும்போது, அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத்துவக்க முன்வாருங்கள். (INITIATIVE)
•தேவையான இடங்களில் நன்றியையும் பாராட்டையும் சொல்ல மறக்காதீர்கள். பாராட்டுக்கு மயங்காத மனிதனே இல்லை. அதுவே உங்களுக்கு வெற்றியாக அமையும்.

Tuesday, August 27, 2013

சின்ன வயசுல நாம எப்படியெல்லாம் இருந்தோம். இப்ப எப்படியெல்லாம் இருக்கோம்!!


1.நமக்கு சாப்புட கைல ஒரு பாக்கெட் மிட்டாய் கிடைச்சாலும் அதை ஒரு நொடில தின்னு காலி பண்ணிருவோம்.இல்லாட்டி நம்ம மண்டை வெடிச்சுரும்.இப்ப அதை கொடுத்தா ஒன்னு மட்டும் எடுத்து வாய்ல போட்டு பாக்கெட்ட ஓரமா வச்சுருவோம்.

2.திருவிழா கடைக்கு போனா நம்ம கண்ல பட்டதெல்லாம் கைய நீட்டிக் கேட்டிருப்போம். இல்லை என்ற பதில் தான் அதிகம் கிடைச்சுருக்கும். அதையும் காசு இல்லைன்னு உண்மைய சொல்லாம அந்த பொருள் நல்லா இல்லைன்னு பொய் சொல்லிருப்பாங்க. இப்ப அது எல்லாத்தையும் வாங்க நம்மகிட்ட காசு இருக்கும், ஆனா விளையாட வயசு தான் இருக்காது.

3.அம்மாக்கிட்ட நொய் நொய்ன்னு எதையாவது பேசிக்கிட்டே இருப்போம்.அவங்களும் புரிஞ்சாலும் புரியாட்டியும் மண்டைய ஆட்டி ரசிச்சுருப்பாங்க. இன்னைக்கு அம்மா நம்ம கிட்ட பேசறப்ப, நாம என்னவோ கலெக்டர் வேலைக்கு போற மாறி "சீக்கிரம் சொல்லுமா " ன்னு அலுத்துகுவோம்.

4.அப்பா நேரத்தோட வீட்டுக்கு வரலைன்னா மூஞ்ச தூக்கிட்டு மூலைல உட்காந்திருப்போம்.இன்னைக்கு நாம நேரம் கழிச்சு வீட்டுக்குப் போறப்ப அப்பா வீட்டுல இல்லைன்னா "அப்பாடா தப்பிச்சோம்" ன்னு பெருமூச்சு விடுவோம்.

5. சிபிஐ மாறி நம்ம அக்கா, அண்ணா லாம் என்ன பண்றாங்கன்னு கவனிக்கரதையே வேலையா வச்சுருப்போம். " இரு இரு உன்னைய அப்பாக்கிட்ட சொல்றேன்னு " மிரட்டி வேற பாப்போம்.இன்னைக்கு நாம பண்ற வேலையெல்லாம் அவங்களுக்கு தெரியாம பாத்துகறதே நமக்கு பெரிய வேலையா இருக்கும்.

6.ஏலேய்....ன்னு ஒரு சத்தம் கேட்டாலே ஓடிபோய் அம்மா முன்னாடி நிப்போம்.இப்ப கோர்ட்ல கூப்புடற மாறி 3 தரம் பேரச் சொல்லிக் கூப்டா கூட நம்ம காதுல விழாத அளவுக்கு இணையத்தில் மூழ்கி இருப்போம்.

7.அப்பாவோ அம்மா வோ வெளிய போனா, என்னைக் கூப்டு போயே ஆகனும்ன்னு தரயில படுத்துட்டு உருண்டு புரண்டு அழுவோம். இப்ப அவங்கள வெளிய கூப்டு போய் அவங்ககூட நேரம் செலவழிக்கரத விட பெரிய வேலைகளெல்லாம் நமக்கு இருக்கும்.

8.பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்குப் போறப்ப, நேரா நடக்க மாட்டோம்.மரக்கிளைய புடிச்சு தொங்கறது, ரோட்ல கிடக்கற கல்ல கலால தள்ளி தள்ளிட்டே போறது. நின்ன இடத்துல சச்சின் போஸ் கொடுக்கறதுன்னு இல்லாத சேட்டைலாம் செஞ்சுக்கிட்டே தான் போவோம். இப்பலாம் ரோட்ல நடக்கறப்ப கைல மொபைல் வச்சுட்டு குனிஞ்ச தலை நிமிராம நேரா போய் செவுத்துல முட்டிப்போம்.